சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்
சென்னை:
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் சம்பளம் கொடுத்து 2 பொறுப்பாளர்களை அமர்த்துகிறதுஅதிமுக. சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ள பக்கவான பல ஏற்பாடுகளையும் அதிமுக படு ரகசியமாகமேற்கொண்டு வருகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தேர்தல் வரலாம் என்று தெரிகிறது. அதை எதிர்கொள்ளதமிழக அரசியல் கட்சிகள் முஸ்தீபுகளை முடுக்கி விட்டுள்ளன. முக்கிய கட்சிகளில் ஒன்றான திமுக பல்வேறுஆலோசனைக் கூட்டங்களைத் தொடங்கியுள்ளது.திமுக தலைவர் கருணாநிதி கடந்த மாதம் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்துஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பேச்சாளர்கள் கூட்டம்ஆகியவை நடந்தன.
இதன் முடிவில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தையும் கருணாநிதி கூட்டி விவாதித்தார்.
கூட்டணியில் முக்கியக் கட்சியான காங்கிரஸ், தமிழகம் முழுவதும் 540 பொதுக் கூட்டங்களை நடத்த முடிவுசெய்துள்ளது. இன்னொரு முக்கிய கட்சியான பாமக தரப்பும் ரகசியமாக சில வேலைகளில் இறங்கி விட்டது.தங்களுக்கு சாதகமான தொகுதிகளை அடையாளம் காண சர்வே நடத்தி வருகிறது.
இந்தப் பட்டியலை வைத்து திமுகவிடம் தொகுதிகள் குறித்த பேச்சுக்களை பாமக மேற்கொள்ளும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் நிதியாக ரூ. 11 கோடி திரட்ட மாவட்டச் செயலாளர்களுக்குஉத்தரவிட்டுள்ளார்.
இப்படி திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் படு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில்அதிமுக தரப்பு தொடர்ந்து அமைதியாக இருந்து வருவது எதிர்க்கட்சியினரிடையே கிலியையயும்,குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் தொடர்பான வேலைகள் எதுவும் தொடங்கப்படாவிட்டாலும் கூட, சலுகைகள்என்ற பெயரிலும் நலத் திட்ட உதவிகள் என்ற பெயரிலும் மக்களை நேரடியாக சென்றடையும் பல திட்டங்களைஅதிரடியாக அறிவித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா.
பொதுத் தேர்தலில் தனித்தே போட்டியிடும் முடிவில் உள்ள அதிமுக, உப்புக்கு சப்பாணியாக கூட சில உதிரிக்கட்சிகளுக்கும் இடமளிக்கவுள்ளது.
எதிர்க்கட்சி கூட்டணியின் பலத்தை கணக்கிட்டும் சில முக்கிய முடிவுகளை ஜெயலலிதா எடுத்துள்ளதாககூறப்படுகிறது. தேர்தல் ஆயத்தப் பணிகளில் முதல் கட்டமாக பிரமாண்டமான மாநாட்டை நடத்த ஜெயலலிதாமுடிவு செய்துள்ளார்.
மதுரை அல்லது திருச்சியில் இந்த மாநாடு நடைபெறும் எனத் தெரிகிறது. இதுதவிர 3 மண்டல தலைவர்களையும்ஜெயலலிதா நியமித்துள்ளார்.
இவர்களிடம் தமிழகம் முழுவதும் 3 பகுதிகளாக பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் தேர்தல்பணிகளை இவர்கள்தான் பார்ப்பார்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் தென் மண்டலபொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களை இவர் கவனிப்பார்.
நிதியமைச்சர் பொன்னையனிடம் வட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலமும், முன்னாள் அமைச்சர்செங்கோட்டையனிடம் மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டலமும்கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மிக முக்கியமாக, 234 தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 2 பொறுப்பாளர்கள்நியமிக்கப்படவுள்ளனர். இந்த இருவரும் அந்தந்த வாக்குச் சாவடியில் உள்ள மக்களை சந்தித்து அவர்களதுபிரச்சினைகளைக் கண்டறிந்து மாவட்ட செயலாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு அதைத் தெரிவித்து குறைகள் உடனடியாகதீர்க்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பொறுப்பாளர்களுக்கு மாத ஊதியம் தரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பளத்தை மாவட்டசெயலாளர்கள் வழங்குவார்கள்.
மேலும் அதிமுக போட்டியிட்டால் வெற்றி கிடைக்கக் கூடிய தொகுதிகள் எவை, நடிகர் விஜயகாந்த்தினால்அதிமுகவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படலாம் என்பது குறித்தும் தீவிர சர்வேயில் அதிமுக இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications