சென்னை செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்: அத்வானி
டெல்லி:
சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி செப்டம்பர் 2வது வாரத்தில்கட்டாயம் நடக்கும் என அக் கட்சியின் தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
பாஜகவிலும், பாஜக-சங் பரிவார் இடையிலும் பெரும் மோதல் நடந்து வருகிறது. கடந்த மாதத்தில் அத்வானி-ஆர்எஸ்எஸ்இடையே மோதல் தீவிரமடைந்ததால் சென்னையில் அப்போது நடக்கவிருந்த செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் மாதத்துதக்குஒத்தி வைக்கப்பட்டது.இந் நிலையில் இப்போது பாஜகவுக்குள் பெரும் கோஷ்டிப் பூசல் ஏற்பட்டுள்ளது. அத்வானிக்கு எதிராக மதன் லால் குரானாவும்,அத்வானியின் சிஷ்யரான நரேந்திர மோடிக்கு எதிராக அம் மாநில மூத்த தலைவரான கேசுபாய் படேலும் வரிந்து கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர்.
தன்னையும் மோடியையும் காத்துக் கொள்ளும் முயற்சிகளில் அத்வானி ஈடுபட்டுள்ளார். கட்சிக்குள் பெரும் குழப்பமும்கோஷ்டித் தகராறும் நடந்து வருகிறது.
மேலும் ஜனா கிருஷ்ணமூர்த்தி, பங்காரு லட்சுமணன் போன்ற தலைவர்கள் அத்வானி ஏதாவது ஒரு பதவியில் இருந்து (பாஜகதலைவர் அல்லது நாடாளுமன்ற கட்சித் தலைவர்) விலக வேண்டும் என்று கோரி பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும் மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி கோஷ்டிக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. அதே போலஜார்க்கண்டில் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கும் பாஜக முதல்வருக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது. பாஜகஅமைச்சர்களும் முதல்வருக்கு எதிராக கொடி தூக்கியுள்ளனர்.
இவ்வாறு ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுவதால் அது செயற்குழுக் கூட்டத்திலும் வெடிக்கலாம் என்று மூத்த தலைவர்கள் அச்சம்தெரிவித்துள்ளனர். இதனால் செப்டம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்ட செயற்குழுக் கூட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்படலாம் என்றகருத்து நிலவுகிறது.
இந் நிலையில் இன்று டெல்லியில் பாஜக நாடாளுமன்றக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அத்வானி, சென்னையில்அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்ட தேசிய செயற்குழுக் கூட்டம் நிச்சயம் நடக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications