டீக் கடையில் லாரி புகுந்தது: 3 பேர் பரிதாப பலி
கடலூர்:
கடலூர் அருகே டீக் கடைக்குள் லாரி புகுந்ததில் 3 பேர் பரிதாபமாகப் பலியாயினர். மேலும் பலர் கடுகாயமடைந்தனர்.
கடலூரை அடுத்த ஆலப்பாக்கத்தில் சிதம்பரம் மெயின் ரோட்டில் இந்த விபத்து நடந்தது. பாலகிருஷ்ணன் என்பவரது டீக்கடையில் பத்துக்கும் அதிகமானோர் நின்று டீக் குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பரங்கிப்பேட்டையில் இருந்து கடலூர்சென் கொண்டிருந்த லாரி பயங்கர வேகத்தில், தாறுமாறாக ஓடி டீக் கடைக்குள் புகுந்தது.இதில் டீ குடித்துக் கொண்டிருந்த 3 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 8க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர்.
டீக் கடையில் மோதிய லாரியை நிறுத்தாத அந்த டிரைவர் அருகே இருந்த எம்ஜிஆர் சிலை மீதும் மோதி விட்டு அங்கிருந்துபயங்கர வேகத்தில் ஓட்டிச் சென்றுவிட்டான்.
காயமடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் கடலூர் மருத்துமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பதாகவும், வேகத் தடை அமைக்கக் கோரி எத்தனையோ முறை மனு கொடுத்தும்அதிகாரிகள் நடவடிக்கவில்லை என்றும் கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதையடுத்து பொது மக்களிடம் போலீசார் சமரசப் பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இதற்கிடையே கட்டுப்பாடே இல்லாமல் பயங்கர வேகத்தில் லாரியை ஓட்டிய அந்த டிரைவர் லாரியுடன் குள்ளஞ்சாவடி காவல்நிலையத்தில் சரணடைந்தான். அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
குடி போதையில், பாதி தூக்கத்தில் அவன் லாரியை ஓட்டி வந்துள்ளான் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications