குளித்தலை ஆசிரியையின் கணவரை கடத்த முயற்சி?
குளித்தலை:
காணாமல் போன குளித்தலை ஆசிரியை மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கத்தை போலீஸ் உடையில் வந்தசிலர் கடத்த முயன்றதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காணாமல்போனார். அவர் என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை துப்பு துலங்காமல் உள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிபோலீஸார் விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் முன்னேற்றம் காணப்படாவிட்டால் சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிடப்படும் என மதுரைஉயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே சிபிசிஐடி போலீஸாருக்கு கெடு விதித்துள்ளது.
இந் நிலையில் ஜோதி ராமலிங்கத்திற்கு மீனாட்சி கடிதம் எழுதியதாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பைஏற்படுத்தியது. ஆனால் இக்கடிதத்தை மீனாட்சி எழுதவில்லை என்று ஜோதி ராமலிங்கம் மறுத்துள்ளார்.போலீஸாரே ஏற்பாடு செய்த செட்டப் கடிதம் இது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் புதிய பரபரப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஜோதி ராமலிங்கம் குளித்தலையில் உரக்கடை நடத்தி வருகிறார். அந்த உரக் கடைக்கு சிலர் போலீஸ் உடையில் வந்து ஜோதி ராமலிங்கத்தை தங்களுடன்வருமாறு அழைத்துள்ளனர்.
அவர்கள் மீது சந்தேகம் அடைந்த ஜோதி ராமலிங்கம் அவர்களுடன் செல்ல மறுத்துள்ளார். தொடர்ந்துதங்களுடன் வருமாறு அவர்கள் வற்புறுத்தியதால் அவர்கள் உண்மையான போலீஸ்காரர்களாக இருக்க முடியாதுஎன்று சந்தேகப்பட்டுள்ளார் ஜோதி ராமலிங்கம்.
இது குறித்து தனது நண்பர்களுக்கு செல்போனில் தகவல் தர அவர் முயன்றதையடுத்து அந்த போலீஸ்காரர்கள்அங்கிருந்து அகன்று விட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஜோதி ராமலிங்கத்தை போலீஸார் யாரும் விசாரணைக்காக அழைக்கவில்லை.அவரை யாரும் கடத்தவும் முயற்சிக்கவில்லை. இதுகுறித்து முழுமையான தகவல்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில்தெரிவிப்போம் என்றனர்.
இந்த வழக்கை ஜெயேந்திரர் வழக்கை விசாரித்த எஸ்பி பிரேம்குமார் தான் இப்போது விசாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications