வியாபாரியை கடத்தி பணம் பறித்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு!!
மதுரை:
தங்களை சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு கடை உரிமையாளரை மிரட்டி ரூ. 30,000 பணத்தையும் செல்போனையும்பறித்துச் சென்ற தமிழக காவல்துறையின் போதைத் தடுப்புப் பிரிவு ரகசிய போலீசாரைப் பிடிக்க தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 திருட்டு போலீசாரும் தலைமறைவாகியுள்ளனர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் நடராஜன். பல்பொருள் அங்காடியின் மொத்த வியாபாரியான இவர் கையில் ஏகப்பட்டபணத்துடன் மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு பஸ் ஏறினார்.அப்போது போதைத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன், ஏட்டு லட்சுமணன் ஆகியமூவரும் பஸ்சில் ஏறி நடராஜனை கீழே இழுத்தனர்.
அவர்களுடன் போதைத் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல்கள் தரும் ஏஜென்டுகள்-கம்-புரோக்கர்களான திருநாவுக்கரசு மற்றும்பொன்னுசாமி ஆகியோரும் இருந்தனர்.
இந்த 5 பேரும் சேர்ந்து நடராஜனை பஸ்சில் இருந்து இறக்க ஒரு காரில் அடைத்துக் கொண்டு மதுரை போதைத் தடுப்புப் பிரிவுபோலீஸ் அலுவலகத்துக்குக் கொண்டு வந்தனர்.
பின்னர், அவரிடம் நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக் கெண்டு அவரது பையில் இருந்த பணத்தை வாங்கிப்பார்த்துவிட்டு இதில் சில 500 ரூபாய் நோட்டக்கள் கள்ள நோட்டுக்களாகும், மேலும் பையில் கஞ்சாவும் கடத்தியதாக வழக்குப்போடப் போகிறோம் என்று மிரட்டினர்.
அதிர்ந்து போன நடராஜன் அவர்களது காலில் விழுந்து கதறியுள்ளார். நான் எங்கே கஞ்சா கடத்தினேன். இந்தப் பையில்பொருள் விற்றதற்கான காசு தானே இருக்கிறது என்று கதறியுள்ளார்.
இதையடுத்து, பையில் இருக்கும் ரூ. 30,000த்தையும் செல்போனையும் கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறோம் என்றுகூறியுள்ளனர். உடன் இருந்த புரோக்கர் நாய்களும் திருட்டு போலீசாருக்கு உடந்தையாக பேசியுள்ளன.
தப்பித்தால் போதும் என்று நினைத்த நடராஜன் பணத்தையும் செல்போனையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு ஊருக்குப்போய்ச் சேர்ந்தார்.
ஆனால், இந்த திருட்டு போலீசாரின் தொல்லை அத்தோடு ஓயவில்லை. நடராஜனை மீண்டும் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேலும் பணம் கேட்டு தொல்லை தந்துள்ளனர்.
இதனால் அவர்கள் சிபிஐ அதிகாரிகள் தானா என்ற சந்தேகம் நடராஜனுக்கு வந்தது. இதையடுத்து திண்டுக்கல் டிஐஜி ரவியைசந்தித்து தனக்கு நடந்ததைக் கூறினார் நடராஜன்.
இதையடுத்து வேகமாக களத்தில் இறங்கிய டிஐஜி, புரோக்கர்களான திருநாவுக்கரசு, பொன்னுசாமியை முதலில் அமுக்கினார்.பின்னர் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரின் டிரைவரையும் பிடித்தார்.
அவர்களை போலீஸ் ஸ்டைலில் டிஐஜி ரவி விசாரித்தபோது, சிபிஐ அதிகாரிகள் போல நடித்தது போதைத் தடுப்புப் பிரிவின்இன்ஸ், சப்-இன்ஸ் மற்றும் ஏட்டு என்று தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், இந்த விவரங்களை தங்களது போலீஸ்தொடர்புகள் மூலம் தெரிந்து கொண்ட 3 திருட்டு போலீசாரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதையடுத்து அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் மீதும் இதற்கு முன்பும்இதுபோல பணம் பறித்த புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு முறை ஒரு ஆசிரியரையே கஞ்சா கடத்தியதாகச் சொல்லி மிரட்டி இக் கும்பல் பணம் பறித்துள்ளது.
இது போன்ற காவலர்களை வைத்துக் கொண்டு தான் தமிழக காவல்துறை போதைக் கடத்தலை ஒடுக்கப் போகிறது...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications