எங்கள் ஆதரவு இருந்தால்தான் ஆட்சியமைக்க முடியும்: ராமதாஸ்
அம்பாசமுத்திரம்:
பாமகவின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாருமே ஆட்சி அமைக்க முடியாது என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ்கூறினார்.
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த பாமக செயற்குழுக் கூட்டத் தீர்மானங்களை விளக்கும் கூட்டம் அம்பாசத்திரத்தில்நடந்தது. இதில் ராமதாஸ் பேசுகையில்,பாமகவின் ஆதரவின்றி இனிமேல் தமிழகத்தில் யாருமே ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி அமைக்க விரும்புவோருக்குபாமகவின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அந்த நிலைக்கு தற்போது பாமக வளர்ந்துள்ளது.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகளின் குரல் வளை நெரிக்கப்படுகிறது. பேசுவதற்கு அவர்களுக்கு உரிமைவழங்கப்படுவதில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதலில் குரல் கொடுப்பதுபாமகதான்.
தமிழகத்தில் ஏழைக்கு ஒரு கல்வி, நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி, பணக்கார வர்க்கத்திற்கு ஒரு கல்வி என கல்வியை கூறுபோட்டு விற்று வருகிறார்கள். தனியார் பள்ளிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஆனால் ஏழைப் பிள்ளைகள்அதிகம் படிக்கும் அரசுப் பள்ளிகள் நலிந்து போய் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தரமான கல்விக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும். படித்து விட்டு வேலை இல்லாமல் இருப்போரின் எண்ணிக்கைஅதிகரித்துக் கொண்டே வருகிறது. 17 லட்சம் படித்த பெண்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அரசுத் துறைகளில் 2 லட்சம்பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
ஆனால், படித்த பட்டதாரிகள் அரசாங்கத்தின் டாஸ்மாக் கடைகளில் சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் அதிகம்புழங்கும் இடங்களிலும் சாராயக் கடைககைள அரசு திறந்து வைத்துள்ளது.
கேட்டால், பெண்களும் அதிக அளவில் சாராயம் குடிப்பதாக, ஒரு பெண்ணைத் தலைவியாகக் கொண்ட அரசு கூறுகிறது. அதிமுகஆட்சியில் பெண்கள், வேலை இல்லாத வாலிபர்கள், அரசு அலுவர்கள் என எந்தப் பிரிவினருமே மகிழ்ச்சியாக இல்லை என்றார்ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications