நடிகைக்கு ஆபாச இ-மெயில்: மாணவன் பிடிபட்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாடலிங் மற்றும் குறும் படங்களில் நடித்து வரும் நடிகை அபேக்ஷா பட்டின் செல்போனுக்கு ஆபாச படங்கள் அடங்கியஇ-மெயில்களை அனுப்பிய மாணவனை போலீஸார் பிடித்து, அறிவுரை கூறி விடுவித்தனர்.

Apeksha

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் அபேக்ஷா பட். 30 வயதாகும் அபேக்ஷா மாடலிங்கில்ஈடுபட்டுள்ளார். அத்தோடு பல குறும் படங்களிலும் நடித்துள்ளார். இவரது கணவர் தொழிலதிபர்.

அபேக்ஷாவின் செல்போனுக்கு ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய இ-மெயில்கள் வந்தவண்ணம் இருந்தன. இதனால்அதிர்ச்சி அடைந்த அவர் மாநகர காவல்துறை ஆணையர் நடராஜிடம் புகார் கொடுத்தார்.

அவரது உத்தரவுப்படி சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு போலீஸார் எங்கிருந்து இந்த ஆபாசப் புகைப்படங்கள், செய்திகள்வருகின்றன என்பதை புலனாய்வு செய்தனர்.

இதில், அடையாறு பகுதியில் உள்ள இன்டர்நெட் மையத்திலிருந்துதான் இவை அனுப்பப்படுகின்றன என்பதை போலீஸார்கண்டுபிடித்தனர். அந்த மையத்தை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பிளஸ்டூ முடித்து விட்டு பொறியியல்கல்லூரியில் சேர அனுமதி கிடைத்துள்ள ஒரு மாணவன் தான் அபேக்ஷாவின் செல்போனுக்கு ஆபாசப் படங்கள் அனுப்புகிறார்என்பதைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த மாணவன் காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார். அவரது பெற்றோருக்கும், அபேக்ஷாவுக்கும்தகவல் தரப்பட்டது.

மகன் செய்த தவறை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் விக்கித்து நின்றனர். தங்களது மகனின் எதிர்காலம் இதில் அடங்கியுள்ளது,இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக அவர்கள் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டனர்.

அபேக்ஷாவும், மாணவனின் நிலையை அறிந்து பரிதாபப்பட்டார். இதையடுத்து அந்த மாணவனுக்கு அறிவுரை வழங்கியஅபேக்ஷா, இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்யாதே, நான் உன்னை மன்னித்து விடுகிறேன் என்று கூறி புகாரை வாபஸ்பெறுவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவனைக் கைது செய்யாமல் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர் போலீஸார்.

அபேக்ஷாவின் பெரிய மனது காரணமாக வழக்கு, சிறையில் இருந்து தப்பினார் அந்த மாணவர். அவரது எதிர்காலத்தைமனதில் கொண்டு பெயர், விவரம் மறைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+