அரசு வக்கீலாக சிதம்பரம் மனைவி நியமனம்: அதிமுக புகார்
டெல்லி:
வருமான வரித் துறை தொடர்பான வழக்குகளில் மத்திய அரசு சார்பில் வாதாட, தனது மனைவி நளினியை நிதியமைச்சர்ப.சிதம்பரம் நியமித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து அவையில் வாக்குவாதம் மூண்டது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில், வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் மீதான விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டுபேசிய அதிமுக எம்பியான ஜோதி,மத்திய நிதியமைச்சர், வருமான வரித்துறை தொடர்பான வழக்குகளில், மத்திய அரசின் சார்பில் ஆஜராக தனது மனைவிநளினியை அரசு வக்கீலாக நியமித்துள்ளார். இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்தப்புகாரை நான் கூறுகிறேன் என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். புதுவை காங்கிரஸ் எம்.பி. நாராயணசாமி பேசுகையில், விதிஎண் 238(ஏ)வின்படி இவ்வாறு புகார் கூறும்போது, சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முன்பே தெரிவித்து, அவரது விளக்கத்தைக்கோர வேண்டும். முன் அனுமதி பெறாமல் இப்படி நேரடியாக குற்றம் சாட்ட முடியாது என்றார்.
இதையடுத்து அதிமுக உறுப்பினர்களான எஸ்.எஸ்.சந்திரன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் எழுந்து ஜோதிக்கு ஆதரவாக குரல்கொடுத்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து பதிலுக்கு அதிமுகவினரை நோக்கி குரல் கொடுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே பெரும்வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த தற்காலிக அவைத் தலைவரான குரியன், ஜோதியையும் அதிமுக எம்பிக்களையும்அமருமாறு கூறினார்.
அப்போது மாநிலங்களவைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத் அவைக்குள் வந்தார்.
அவரிடம் தனது குற்றச்சாட்டைத் தெரிவித்தார் ஜோதி. ஆனால் முன் அனுமதியில்லாமல் இப்படியெல்லாம் பேச முடியாதுஎன்று ஷெகாவத் கூறினார். இதையடுத்து தன்னிடமிருந்த ஆவணங்களை ஷெகாவத்திடம் கொடுத்தார் ஜோதி.
இந்த ஆவணங்களை ஆராய்ந்து முடிவைத் தெரிவிப்பதாக ஷெகாவத் கூறவே தனது இருக்கையில் அமர்ந்தார் ஜோதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications