முத்திரைத் தாள் மோசடி: முகம்மது அலி மீது அடுத்தகட்ட நடவடிக்கை
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் சிக்கி, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சிபிசிஐடி டிஐஜி முகம்மது அலி மீதுமேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் உயர் காவல் அதிகாரிகள் பலரும் சிக்கியுள்ளனர். இந்த வழக்கில் சிக்கியமுதல் மூத்த அதிகாரி டிஐஜி முகம்மது அலி. இவரைத் தொடர்ந்து சென்னை மாநகர உதவி காவல் ஆணையர் சங்கர், மதுரைஎல்.ஐ.சி அதிகாரி ராமசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் முகம்மது அலியும், சங்கரும் ஏற்கனவே தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது ஜாமீனில்விடுதலையாகியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ரயில்வே ஐ.ஜி. ராதாகிருஷ்ணனும் தற்காலிக பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளார். இவர் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இவர்கள் தவிர முத்திரைத் தாள் மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ல கூடுதல் டிஜிபி அமீத் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டுபதவியில்லாமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதே போல டிஜிபி ரமணியும் இதில் சிக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் மத்திய நிர்வாகப் பணியின் வரும் அதிகாரிகள்என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
முதலிலேயே இந்த பரிந்துரையைச் செய்யாமல் நீண்ட கால தாமதத்துக்குப் பின்னரே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகஅரசு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், முகம்மது அலி மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஐ.பி.எஸ். அதிகாரிஎன்பதால் அதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள்கூறுகின்றன.
முகம்மது அலி மீது ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலிமுத்திரைத் தாள் மோசடி வழக்கில் முகம்மது அலி மற்றும் சங்கர் மீது இன்னும் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
ஐ.பி.எஸ். அதிகாரிகள் என்பதால் மத்திய, மாநில அரசுகளின் அனுமதி இல்லாமல் சிபிஐயால் குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 11 மாதமாக ஜாமீனில் இருக்கும் இந்த இருவர் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. மத்திய அரசின்அனுமதி கிடைத்தவுடன் இருவர் மீதும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications