பெண்களுக்கு இட ஒதுக்கீடு: உடனே சட்டம் கொண்டு வர கருணாநிதி கோரிக்கை
சென்னை:
நாடாளுமன்றத்திலும் சட்டப் பேரவைகளிலும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாகக் கொண்டு வர வேண்டும்என்றும், இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒத்த கருத்துக்கு வரும் வரை காத்திருக்க முடியாது என்றும் திமுககூறியுள்ளது.
அக் கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்த விஷயத்தில் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை காண்பதற்காக காத்துக் கொண்டே இருக்க முடியாது. இந்த நீண்டகாத்திருப்பு மூலம் முடிவு தான் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
பிரஞ்ச் தத்துவஞானி வால்டர் ரூஸ்ஸே கூறியது போல, கருத்தொற்றுமை உருவாகாவிட்டால் பெரும்பான்மையோரின் கருத்தேஇறுதியானதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்காக நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் 33 சதவீதத்தை இரட்டைஉறுப்பினர் கொண்ட தொகுதிகளாக மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை (இது முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள யோசனைஎன்பது குறிப்பிடத்தக்கது). இந்த யோசனை இட ஒதுக்கீட்டுக்கு இன்னொரு தடையாகத் தான் இருக்க முடியும்.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு தருவதற்காக நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் உள்ள இடங்களை அதிகரிக்க வேண்டும்என்ற யோசனையும் தவறானது. இதன்மூலம் பெண்களுக்கு உரிய உரிமைகளை ஆண்கள் விட்டுத் தர மறுக்கிறார்கள் என்றுதான் பொருள்.
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுக்குள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனியாக ஒரு இட ஒதுக்கீடு தேவை என்றகோரிக்கை இப்போதைக்கு அவசியமில்லாதது. முதலில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை கொண்டு வருவோம். பின்னர்அதில், பிற்பட்ட-தாழ்த்தப்பட்டோருக்கான தனி ஒதுக்கீட்டை படிப்படியாகக் கொண்டு வரலாம்.
ஆண் ஆதிக்கம் மிக்க இந்த சமூகத்தில் தேர்தலில் பெண்களுக்கு உரிய பங்கு தரப்படவில்லை. எத்தனை காலம் தான் பெண்கள்தங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டே இருக்க முடியும்?. இதனால் தான் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கிறோம்என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications