பச்சிளம் பெண் குழந்தையை உயிருடன் புதைத்த தாய், பாட்டி
மதுரை:
பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற தாயையும் பாட்டியையும் போலீசார் கைதுசெய்தனர். மண்ணில் புதைக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில்சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடூரமான சம்பவம் மதுரையில் நடந்தது.ஈஸ்வரி என்ற 25 வயது பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அதைக் கொல்ல முடிவு செய்தனர் ஈஸ்வரியும் அவரது தாயாரும்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஈஸ்வரி குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வைகைஆற்றங்கரைக்குச் சென்றார்.. கூடவே அவரது தாயாரும் சென்றார்.
அப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு சென்ற பெண்களைப்பார்த்து சந்தேகமடைந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தனர்.
குழந்தையை மருத்துவர்கள் தான் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறியதாக அவர்கள்கதைவிட்டனர். ஆனால் அவர்களைத் திட்டிய போலீசார் குழந்தையை கையில் எடுத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இரு பெண்களும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர்.
ஆனாலும் இருவர் மீதும் சந்தேகம் இருந்ததால், அவர்களை பின் தொடர முடிவு செய்தனர்.
ஆனால், இயற்கை உபாதைக்காக இருவரும் ஆற்றுக்குச் செல்வதாகக் கூறவே அவர்களை போலீசார் உடனே பின்தொடரவில்லை.
இரு பெண்களும் தொடர்ந்து ஆற்றுக்குள்ளேயே இருக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்தனர்.
அப்போது அவர்கள் கண்ட காட்சி உயிர் உறைய வைத்தது. இரு பெண்களும் கையாலேயே ஆற்று மணலில் குழி தோண்டுகுழந்தையை புதைத்துவிட்டு மூடிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து ஓடி வந்த போலீசார் குழந்தையை உடனடியாக மண்ணில் இருந்து மீட்டனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டுமண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை மயங்கிப் போய் இருந்தது.
உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஓடி வந்தனர். மருத்துவர்கள் உடனேகுழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பித்தனர்.
குழந்தையைப் புதைத்த தாய் ஈஸ்வரியையும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி. தனக்கு பையன் தான் வேண்டும் என அவரதுகணவர் கூறியுள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஈஸ்வரியிடம் அவர் பேசக் கூட இல்லை என்று தெரிகிறது.
இதனால் வெறுத்துப் போய் குழந்தையை புதைத்துக் கொல்ல முடிவு செய்ததாக ஈஸ்வரி விசாரணையின்போது கூறினார்என்றனர்.
குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்கு உதவவே தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு நடத்தி வருகிறது.குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுபவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலை உள்ளது.
அதைக் கூட செய்யாமல், குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த ஈஸ்வரியை என்னவென்று சொல்வது? பெண் குழந்தைபிறந்ததால் மனைவியிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட கணவரை என்ன செய்வது?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications