தேர்தல் செலவு: முடிந்த அளவுக்கு கவனிக்கப்படும்- கட்சியினரிடம் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த திமுகவினரை சென்னைக்குவரவழைத்து நேர்காணல் நடத்தி வருகிறார் கருணாநிதி. அண்ணா அறிவாலயத்தில் இந்த நேர்காணல் நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் கருணாநிதி பேசுகையில்,

கோவை மாவட்ட திமுகவினர் தயாரித்த மினிட் புக்குகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். வரும் தேர்தலுக்கு அமைக்கவேண்டிய பூத் கமிட்டிகளைக் கூட இப்போதே திட்டமிட்டுவிட்டீர்கள். இது பாராட்டத்தக்கது.

தேர்தலுக்கு அதிமுக ஆயத்தமாகிவிட்டது. அவர்கள் பூத் கமிட்டி எல்லாம் போட்டு விட்டார்கள். வசதி வாய்ப்புகளை எல்லாம்(பணம்) வழங்கிவிட்டார்கள் என்ற செய்திகளைப் பார்த்து நீங்கள் எல்லாம் பெரு மூச்சு விடக் கூடும்.

நம் கட்சியில் எப்போது பூத் கமிட்டி போடப் போகிறார்கள்?. இவர் (கருணாநிதி) என்ன நம்மையெல்லாம் அழைத்துஆலோசனை மட்டும் தந்து அனுப்புகிறாரரே.. வேறு எதுவும் (பணம்) தருவதாகத் தெரியவில்லையே என்று நீங்கள் எல்லாம்பேசிக் கொண்டிருப்பது என் காதில் விழுந்து கொண்டு தான் இருக்கிறது.

அதெல்லாம் கவனிக்கப்படும். முடிந்த அளவுக்கு கவனிக்கப்படும். முடிந்த அளவுக்கு என்றால் எவ்வளவு முடிந்துவைத்திருக்கிறேனோ அந்த அளவுக்கு என்பதைத் தான் சொல்கிறேன்.

யாரையும் வெறும் கையால் முழம் போடுங்கள் என்று நிச்சயம் சொல்ல மாட்டோம். சின்ன கந்தல் துணியையாவது தந்து அதில்முழம் போடுங்கள் என்று சொல்வோமே தவிர, வெறும் கையால் முழம் போடச் சொல்ல மாட்டோம்.

அடுத்த கட்டமாக நீங்கள் பூத் கமிட்டிகளின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தி தூண்டிவிட வேண்டும். பூத் கமிட்டி உறுப்பினர்கள்என்ற பெயரில் அவர்களது புகைப்படும் எடுத்து பெயர்களை எழுதி மினிட் புத்தகத்தில் ஒட்டிவிட்டால் மட்டும் போதாது.

ஒட்டப்பட்ட படத்துக்கு உரியவர்கள் எப்போதும் நம்மிடம் ஒட்டியே இருப்பார்களா என்பதையும் பார்த்துக் கொள்ளவேண்டும். (அதிமுகவிடமிருந்து பணம் வந்தால்) வெட்டிக் கொண்டு போவதற்குத் தயாரான அசகாய சூரர்கள் எல்லாம்இருப்பார்கள். நான் எல்லோரையும் சொல்லவில்லை. சில பேரை கடத்திப் போகக் கூட அவர்கள் (அதிமுக) தயாராகஇருப்பார்கள்.

சொல்லப் போனால் பூத்களில் அவர்கள் வேலை பார்ததுக் கொண்டிருக்கும்போதே கூட தேர்தல் நாளிலேயே அப்படிச் சிலரைவிலை கொடுத்து வாங்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்திருக்கின்றன. இதனால் பூத் கமிட்டிகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக,கவனமாக இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+