இலங்கை அகதிகளுக்கான அரிசி மானியம் திடீர் ரத்து: மத்திய அரசுக்கு ஜெ. கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை அகதிகளுக்கான அரிசி மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதாகண்டனம் தெரிவித்துள்ளார். மீண்டும் மானியம் வழங்க உத்தரவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குஅவர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு மத்திய அரசு வழங்கி வந்த அரிசி மானியத்தை மத்திய உள்துறை திடீரென ரத்துசெய்துள்ளது. தமிழகத்தில் 108 அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில் 50,674 அகதிகள் தங்கியுள்ளனர்.

1983ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இலங்கையில் நடந்த இன மோதல்களைத் தொடர்ந்து இந்த அகதிகள்தமிழகம் வந்தனர். இயல்பு நிலை திரும்பியதும் தாயகம் திரும்பக் காத்துள்ளனர். இந்தப் பிரசசினை சர்வதேசபிரச்சினையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இவர்களுக்கு மாநில அரசு வழங்கி வந்த அரிசிக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வந்தது.அகதிகள் இன்னும் தமிழகத்தில் இருக்கும் நிலையில் மானியத்தை திடீரென ரத்து செய்துள்ளது முறையல்ல.

அதற்கு மத்திய உள்துறை தெரிவித்துள்ள காரணம் ஏற்கத்தக்கதல்ல. இந்த அறிவிப்பு மிகப் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

அரிசி மானியம் மூலம் ஆண்டுக்கு ரூ. 7 கோடி வரைதான் செலவாகும். அதுவும் அகதிகள் திரும்பிச் சென்றுவிட்டால் செலவு முற்றிலும் குறைந்து விடும். விதிமுறைப்படி பார்த்தால் அகதிகளைப் பராமரிப்பது மாநில அரசின்வேலையல்ல.

ஆனால் மனித நேயத்துடன் அகதிகளை தமிழகத்தில் தங்க வைத்து நிதியுதவி, இருப்பிடம், உணவு, உடை எனதமிழக அரசு வழங்கி வந்து கொண்டுள்ளது. இதற்காக ரூ. 25 கோடி வரை மாநில அரசு செலவிட்டுள்ளது.

இந் நிலையில், அரிசி மானியத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது மனிததன்மையற்ற செயலாகும். எனவேஉடனடியாக அரிசி மானியத்தை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+