விஜயகாந்த் பேனர் கிழிப்பு பா.ம.க. மீது ரசிகர்கள் புகார்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

தங்களது மாநாட்டு விபரங்களை பா.ம.கவினர் அழித்து வருவதாக கடலுர் போலீஸாரிடம் விஜயகாந்த் ரசிகர்கள் புகார்கொடுத்துள்ளனர்.

வரும் செப்டப்பர் 14ம் தேதி மதுரையில் விஜயகாந்த் கட்சியின் மாநாடு நடக்கிறது. இந்த மாநட்டுக்காக தமிழகம் முழவதும்அவரது ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் ,பேனர்கள் வைத்துள்ளனர்.

கடலுர் அண்ணா பாலம் அருகே வைக்கப்பட்டுருந்த விஜயகாந்த் மாநாட்டு பேனர்கள் இரண்டு நாட்களுக்கு முன்கிழிக்கப்பட்டன. இதுபோல சுவர் விளம்பரங்களும் தார் பூசி அளிக்கப்பட்டிருந்தன. இதற்கு பா.ம.க. தான் காரணம் என்றுவிஜயகாந்த் மன்ற நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடலுர் மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்ற செயல் வீரர்கள் கூட்டம் மஞ்சகுப்பத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும்மாவடட ரசிகர் மன்றத் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்ப்பட்ட ரசிகர்கள் ஊர்வலமாக புதுநகர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் மனு கொடுத்தனர்.

அதில், விஜயகாந்த் ரசிகர் மன்ற விளம்பரங்கள், பேனர்கள் பா.ம.கவினர் அழிக்கின்றனர். பா.ம.க. மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர் கலைநாதன் தலைமையில்

இரண்டு பேர் ஆட்டோவில் சென்று விளம்பரங்களை அழித்து வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறப்படிருந்தது.

இதற்கிடையில் பா.ம.கவினரும் பதில் புகார் கொடுந்தனர். அதில் விஜயகாந்த் ரசிகர் ஊர்வலமாக வரும்போது பா.ம.கஅலுவலகம் மீது கல் வீசித் தாக்கியதாக கூறியுள்ளனர். இரு தரப்பு

புகார்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடந்தி வருகின்றனர்.

மேலும் பா.ம.க., விஜயகாந்த் ரசிகர்கள் இடையே மோதல் எற்படலாம் என்பதால் இப்பகுதியில் போலீஸ் கண்கணிப்பு தீவிரமாகஉள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+