சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மாநாடு: 10,000 பேர் குவிந்தனர்
சென்னை:
தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில மாநாடு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 10,000க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சென்னையில்குவிந்துள்ளனர்.
கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்க உத்தரவிட்டார். தற்போது தமிழகம் முழுவதும்2,11,152 குழுக்கள் உள்ளனர். இதில் மொத்தம் 35,41,846 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.இந்தக் குழுக்கள் ரூ. 754.39 கோடி வரை சேமித்து, அதை வங்கிகளிடம் கணக்கு வைத்துள்ளன.
இதையடுத்து இந்தக் குழுக்களுக்கு ரூ. 1,295.08 கோடி வரை வங்கிகள் கடனுதவி கொடுத்துள்ளன. இந்தக் கடன் தொகையைவைத்து ஊறுகாய், கைவினைப் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன இந்தக்குழுக்கள்.
இதில் கிடைக்கும் லாபத்தை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் இந்தக் குழுவினர் தாங்கள் பெற்ற கடனையும் திறம்படஅடைத்து வருகின்றன. சுய உதவிக் குழுக்களுக்குத் தரப்படும் கடனில் 98 சதவீதம் திரும்ப வசூலாகிவிடுகிறது.
இதனால் இவர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து கடனுதவி தர முன் வருகின்றன. இந்தத் தொகையை வைத்து தங்களது சிறுதொழிலை இந்தக் குழுவினர் தொடர்ந்து விரிவுபடுத்தி வருகின்றன. தமிழகத்தில் இந்தக் குழுக்கள் மிக வெற்றிகரமாகசெயல்படுகின்றன.
இவர்களில் 5 லட்சம் உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சியையும் தமிழக அரசு அளித்துள்ளது. தற்போதுபல்வேறு துறைகளில் பல தரப்பட்ட தயாரிப்புகளை மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊறுகாய் விற்பது போன்ற சிறிய தொழில்களில் ஆரம்பித்த இந்தக் குழுவினர் இன்று கூட்டுறவு ரேஷன் கடைகளை நடத்துதல்,கல் குவாரிகள் நடத்துதல், வனப் பொருட்கள் விற்பனை, ஆட்டோக்களை வாங்கி இயக்குதல், மினி பேருந்துகளை சொந்தமாகவாங்கி இயக்குதல், மோட்டார் மின் கம்பி சுற்றுதல் என பல்வேறு தொழில்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
இந் நிலையல் இந்த சுய உதவிக் குழுவினரின் மாநில மாநாடு இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயலலிதாதலைமையில் நடக்கிறது.
இந்த மாநாட்டின்போது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி, சிறந்த சுய உதவிக் குழுக்கள்,ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு ஜெயலலிதா விருதுகள் வழங்குகிறார். மேலும் பல புதிய திட்டங்களையும் அவர்அறிவிக்கவுள்ளார்.
இதில் கலந்து கொள்வதற்காக 10,000க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் சென்னை வந்துள்ளனர்.
இந்தக் குழுவினரை அதிமுக தனது தேர்தல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்துவதாக அவ்வப்போது எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவருவது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications