வேலூர் மண்டல திமுக மாநாடு: நாளை தொடங்குகிறது
வேலூர்:
திமுகவின் மண்டல மாநாடு நாளை வேலூரில் தொடங்குகிறது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள்நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு கட்சியினரைத் தயார் செய்யும் விதமாக மண்டல மாநாடுகளை நடத்தி வருகிறது திமுக. இதுவரைதிண்டுக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட மாநாடுகள் நடந்து முடிந்துள்ளன.இந் நிலையில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர் மண்டலமாநாடு சனிக்கிழமை முதல் 2 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
பெருமுகை- புதுவசூர் பகுதியில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அங்கு மாநாடு நடைபெறுகிறது. பெரும் பொருட்செலவில் மாநாட்டு பந்தலும், மேடையும் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டுப் பந்தலின் மேல் பகுதியில் உள்ள துணி ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளதாம்.
மாநாட்டையொட்டி வேலூர் நகர் முழுவதும் திமுக தலைவர்களின் கட் அவுட்கள், பேனர்கள், வரவேற்பு வளைவுகள்,தோரணங்கள் என திமுகவினர் தூள் கிளப்பியுள்ளனர்.
சனிக்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்குகிறது. முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் திமுககொடியை ஏற்றி வைக்கிறார். மாநாட்டை முன்னாள் அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்கிறார். 11 மணி முதல் பல்வேறுதலைவர்கள் பேசவுள்ளனர்.
மாலை 4 மணியளவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இரவு 9 மணியளவில் பொதுச் செயலாளர் அன்பழகன் ஆற்றும்உரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.
2வது நாள் மாநாட்டில் துணை பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். மேலும் பல தலைவர்களும் பேசவுள்ளனர். கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
மாலை 4 மணிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஜி.கே.வாசன், வைகோ, வரதராஜன், தா.பாண்டியன்,ஆர்.எம்.வீரப்பன், ராஜ கண்ணப்பன், ஜவாஹிருல்லா, டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுபேசுகிறார்கள்.
திமுகவைச் சேர்ந்த நடிகர்கள் சரத்குமார், சந்திரசேகர், நெப்போலியன் உள்ளிட்ட கலைஞர்களும் மாநாட்டில் பேசவுள்ளனர்.இரவு 8 மணியளவில் கருணாநிதி நிறைவுப் பேருரையாற்றுகிறார்.
வேலூர் மாநாடு பல வகைகளிலும் திமுகவினருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications