சந்திரிகாவின் கனவை கலைத்தது இலங்கை உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அதிபர் சந்திரிகாவின் இறுதிப் பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பரோடு முடிவடைவதாக இலங்கை உச்ச நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து அதிபர் பதவிக்கு இந்த ஆண்டு டிசம்பரிலேயே தேர்தல் நடத்த வேண்டிய நிலைக்கு அவர்சந்திரிகா தள்ளப்பட்டுள்ளார்.

இரண்டாவது முறையாக அதிபராக உள்ள சந்திரிகாவால் மீண்டும் அதே பதவிக்கு போட்டியிட முடியாது என்பதுகுறிப்பிடத்தக்கது. இலங்கை அரசியல் சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் யாரும் அதிபர் பதவி வகிக்க முடியாது.

1994ம் ஆண்டு ஆகஸ்டில் முதல் முறையாக சந்திரிகா அதிபரானார். தனது 6 ஆண்டு பதவிக் காலம் முடிவடைவதற்குமுன்னதாகவே 1999ம் ஆண்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட்டார்.

அதிலும் வென்று மீண்டும் அதிபரானார். இதனால் அவரது 6 ஆண்டு பதவிக் காலம் இந்த ஆண்டு டிசம்பரில் முடிவடைகிறது.

ஆனால், முதல் முறை பதவியில் இருந்தபோது பாதியில் விலகியதால், அதில் மிச்சமுள்ள ஆண்டுளையும் இந்த முறையோடுசேர்த்து 2006ம் ஆண்டு இறுதி வரை பதவியில் இருக்க தனக்கு உரிமை உள்ளதாக பேசித் திரிகிறார் சந்திரிகா.

அவரது இந்த சொத்தை வாதத்தை எதிர்த்து அந் நாட்டு எதிர்க் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகின. இதனை விசாரித்ததலைமை நீதிபதி சரத் சில்வா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், சந்திரிகாவின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 22ம்தேதியோடு முடிவுக்கு வருவதாக இன்று அதிரடி தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் நவம்பர் 22ம் தேதிக்குள் அதிபர் பதவிக்கான தேர்தலை நடத்த வேண்டியநிலைக்கு அந் நாட்டு தலைமைத் தேர்தல் அதிகாரி தயானந்த திஸ்ஸநாயகே தள்ளப்பட்டுள்ளார்.

இன்று தீர்ப்பு வெளி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சந்திரிகாவின் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கைவெளியிடப்பட்டது. அதில்,

அதிபர் சந்திரிகா தனக்கு ஓய்வூதியம் ஏதும் வேண்டாம் என தெரிவித்துவிட்டார். அதே நேரத்தில் பதவிக் காலம் முடிந்த பின்வீடு கட்டுவதற்காக பெரிய அரசு நிலத்தை மட்டும் ஏற்பதாக அறிவித்துள்ளார்.

2006ம் ஆண்டில் தனது பதவிக் காலம் முடிந்தவுடன் (இதைச் சொல்வதற்காகத் தான் இந்த அறிக்கையே வெளியாகியுள்ளது)அவர் தனது ஓய்வு இல்லத்தை கட்டுவார் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது 2006 வரை பதவியில் நீடிப்பேன் என்பதை நீதிமன்றத்துக்கு மறைமுகமாக வெளிப்படுத்தும் விதமாகவே தீர்ப்புவெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த வீடு கட்டும் அறிக்கையை வெளியிட்டுள்ளார் சந்திரிகா.

ரணில் வரவேற்பு:

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை முக்கிய எதிர்க் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சியுடன்வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், தேர்தல் முறையாகவும் நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அதிபர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் போட்டியிடப் போவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நீதிமன்றத்தின் தீர்ப்பை அதிபர் மதித்து நடப்பார் என அரசின் செய்தித் தொடர்பாளர் நிமல் டிசில்வாதெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+