15 அரசியல் தலைவர்களுக்கு சிகரம் விருது!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தைச் சேர்ந்த (கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த) 15 அரசியல் தலைவர்களுக்கு இந்தியாடுடே பத்திரிக்கை சார்பில் சிகரம் விருது வழங்கப்பட்டது.

இந்தியா டுடே இதழின் சார்பாக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுதோறும் சிகரம் விருதுவழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசியலில் சிறந்து விளங்கும் 15 தலைவர்களுக்கு சிகரம் விருதுவழங்கப்பட்டுள்ளது.

திமுகவைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஜெயக்குமார், நைனார்நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பாஜகவைச் சேர்ந்தசி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா,

பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலபாரதி, பி.மோகன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், மதிமுகவைச் சேர்ந்த மயிலை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள்தலைவர் தொல் திருமாவளவன்,

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான விழா சென்னையில் நடந்தது. விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 பேரில் அன்புமணி ராமதாஸ்மட்டும் நேரில் வரவில்லை. அவருக்குப் பதில் பாமக தலைவர் ஜி.கே.மணி விருதைப் பெற்றுக் கொண்டார். மற்ற14 தலைவர்களும் நேரில் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

விருது பெற்ற பின்னர் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+