விநாயகர் சதுர்த்தி: மிகத் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:
விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் போலீசாரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
விநாயக் சதுர்த்தி விழா செப்டம்பர் மாதம் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது.இதையொட்டி தமிழகம் முழுவதும் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணி,கேகே நகர், எம்ஜிஆர் நகர், வட பழனி, புரசைவாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர் உள்பட பல இடங்களில் 300க்கும் அதிகமானசிலைகள் வைக்க போலீசார் அனுமதி தந்துள்ளனர்.
11ம் தேதி வினாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் சிலைகள் கடலில் கரைக்கப்படும்.இதற்காக நீலாங்கரை, திருவொற்றியூர், காசிமேடு, பட்டினப்பாக்கம் உள்பட 6 கடற்கரைப் பகுதிகளை போலீசார்ஒதுக்கியுள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கும்போது பெரும் பரபரப்பான சூழல் நிலவுவது உண்டு. ஊர்வலம் செல்லும் பாதைகளில்மோதல்கள் மூண்டதும் உண்டு. இதனால் ஊர்வலப் பாதை குறித்து முடிவு செய்ய காவல்துறையினர் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை சீர்குலைக்க தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.நேசனல் டிபன்ஸ் போர்ஸ் என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பு இற்கான சதியை தீட்டியுள்ளதாக உளவுத்துறைஎச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்தச் சதியை முறியடித்து ஊர்வலத்தை பாதுகாப்பாக நடத்தி முடிக்க போலீசார் தீவிர முயற்சிகளில்ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நகரில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு 24 மணி நேர பாதுகாப்பு போட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதேபோல விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், கரைக்கவும் இந்து அமைப்புகளுக்கு தனித்தனியாக நேரம்ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஆயுதப் படையினரை நிறுத்தவும், ஊர்வலத்துக்கு வரலாறு காணாத பாதுகாப்பை வழங்கவும்முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரில் மட்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications