தூத்துக்குடி: விபச்சாரத்தில் ஈடுபட்ட 10 பெண்கள், 4 புரோக்கர்கள் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய மறைந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி உள்பட 10பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 புரோக்கர்களும் பிடிபட்டுள்ளனர்.
முத்தம்மாள் காலனி பகுதியில் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்து வருகிறது. இதில் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பெரும்பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இரு தனிப்படைகள் அமைத்து இக் கும்பலை அமுக்க உத்தரவிட்டார் எஸ்.பி.மகேஷ்குமார்.இதைத் தொடர்ந்து பெண் காவலர்களும் அடங்கிய இரு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. முத்தம்மாள் காலனியில் 4வதுதெருவிலும் 5வது தெருவிலும் இரண்டு வீடுகளில் விபச்சாரம் நடப்பதை இந்தப் படையினர் உறுதி செய்தனர்.
இதையடுத்து இரு வீடுகளையும் தனிப்படை போலீசார் முற்றுகையிட்டனர்.
4வது தெருவில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடத்திய தங்கம் (32), பூக்காரி (38), வள்ளி (37), சந்தியா (26), மகேஸ் (32) ஆகியபெண்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் புரோக்கர்களான செல்லையா, முனியசாமி ஆகியோரும் பிடிபட்டனர். இந்தக் கும்பல் தங்கம் தலைமையில்விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
அதே போல 5வது தெருவில் அன்புசரோஜினி (54), சாந்தி (35), பட்டுக்கனி என்ற விஜயா (28), கெஜதா (42), ரோகிணி (42)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புரோக்கர்களான நாராயணன், முருகப்பெருமாள் ஆகியோரும் சிக்கினர்.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் இருந்தும், இவர்களிடம் பிடிபட்ட செல்போன்கள் மூலமும் இவர்கள் பெரியநெட்வோர்க்காக செயல்பட்டது உறுதியாகியுள்ளது.
வீடுகளுக்குச் சென்றும், விடுதிகளிலும் இவர்கள் விபச்சாரம் செய்து வந்துள்ளனர்.
இதில் கைதாகியுள்ள அன்புசரோஜினியின் கணவர் மோசஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்று, பின்னர்இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications