ஆப்காகானிஸ்தானில் மன்மோகன் சிங், ராகுல் காந்தி
காபூல்:
இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆப்கானிஸ்தான் சென்றார். அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது.
தலிபான்-அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆட்சி கவிழ்ந்த பிறகு அந் நாட்டுக்குச் செல்லும் முதல் பிரதமர் சிங் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 29 ஆண்டுகளில் அந்நாட்டுக்குச் செல்லும் முதல் பிரதமரும் இவரே. கடைசியாக இந்திராகாந்தி தான் அங்கு விஜயம் செய்திருந்தார்.தலிபான்களால் சின்னாபின்னாவாகிப் போன ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா பெரும் உதவிகளை வழங்கி வருகிறது.தலிபான்கள் ஆட்சியின்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட மசூத் தலைமையிலான படையினருக்கு ரஷ்யா, ஈரானுடன்சேர்ந்து இந்தியாவும் பணம், ஆயுதங்கள் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள மசூத் ஆதரவாளர்கள் இந்தியா விஷயத்தில் மிகுந்த நன்றியணர்வுடன் நடந்துவருகின்றனர்.
உள்நாட்டுப் போராலும், தலிபான்களின் தவறான ஆட்சியாளும் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரக் கட்டமைப்பே சீர்குலைந்துபோய் கிடக்கிறது. அந் நாட்டின் மறு சீரமைப்புக்காக 50 மில்லியன் டாலர் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இந்தியாநிறைவேற்றவுள்ளது.
இதில் அந் நாட்டுக்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டுவது, நெடுஞ்சாலைகள் அமைத்துத் தருவது ஆகியவையும்அடக்கம்.
இதற்கான நிதியுதவியை அறிவிக்கவே பிரதமர் மன்மோகன் சிங் ஆப்கானிஸ்தான் வந்துள்ளார். அவருடன் மனைவி குர்சரண்கெளரும், சோனியாவின் மகனான எம்பி ராகுல் காந்தியும், வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங்கும் வந்துள்ளனர்.
இன்று அந் நாட்டு பிரதமர் ஹமீத் கர்சாயுடன் (இவர் ஹிமாச்சலில் உயர் கல்வி பயின்றவர்) பேச்சு நடத்தும் பிரதமர், பல்வேறுவளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கவுள்ளார்.
இந்தியா கட்டப் போகும் ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு சிங் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்படுகிறது.இந்தியா கட்டித் தந்துள்ள பள்ளியையும் கர்சாயிடம் சிங் ஒப்படைக்கிறார்.
கடந்த 2002ம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு 500 மில்லியன் டாலர்களை இந்தியா வழங்கியுள்ளது. இதில் கோதுமை,ரொட்டிகள், சர்க்கரை உள்ளிட்ட உணவுப் பொருட்களும், கட்டடங்கள் கட்டுவது, புதிய ராணுவத்துக்கான சாதனங்கள்,தொலைத் தொடர்பு, கல்வித்துறை, மருத்துவமனைகள், மின்சார தயாரிப்பு ஆகியவையும் அடங்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications