300 அடி ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து 7 வயது சிறுவன் பலி
போடிநாயக்கனூர்:
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரம் கிராமத்தில், 300 அடி ஆழ போரிங் குழாய் துளையில்விழுந்து 7 வயது சிறுவன் பரிபாதமாக இறந்தான்.
ராசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக் காமாட்சி- பாண்டியம்மாள் தம்பதியின் மகன் ஜீவா (வயது 7). முத்துக்காமாட்சியும்,பாண்டியம்மாளும் கூலி வேலை செய்பவர்கள். கடந்த 17ம் தேதி முதல் தேவாரம் பகுதியில் உள்ள சம்பத் என்பவரின் பண்ணைவீட்டில் வேலை செய்து வந்தனர்.பண்ணையிலேயே ஒரு குடிசையில் தங்கியிருந்தனர். மகன் ஜீவாவை தனது தாய் வீட்டில் விட்டு வைத்திருந்தார்பாண்டியம்மாள். இந் நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் ஜீவாவை தேவாரத்துக்கு அனைத்து வந்தனர்.
சனிக்கிழமை காலை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் ஜீவா.
அப்போது அங்கு தோண்டப்பட்டு, பயன்படுத்தப்படாமல் விடப்பட்டிருந்த 300 அடி ஆழ ஆழ்குழாய்க் கிணற்றின் துளையில்தவறி விழுந்து விட்டான். இதைப் பார்த்த அவனது தந்தை அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் ஓடி அனைவரையும்கூப்பிட்டார்.
உத்தமபாளையம் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்தனர்.
ஆழ்குழாய் கிணறை சுற்றி பொக்லைன் எந்திரம் மூலம் பரும் பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனை பத்திரமாக மீட்க பல்வேறுமுயற்சிகளில் தீயணைப்புப் படையினர் இறங்கினர். குழாய்க்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
பின்னர் ஒரு நீண்ட கொக்கியை குழாய்க்குள் அனுப்பி அதன் மூலம் சிறுவனை மேலே கொண்டு வர முயற்சித்தனர். கிட்டத்தட்ட11 மணி நேரமாக போராடிய தீயணைப்பு வீரர்கள், இரவு 8.45 மணியளவில் சிறுவனின் உயிரற்ற உடலை குழாய்க்குள்ளிருந்துமேலே கொண்டு வந்தனர்.
உயிரற்று வெளியே வந்த ஜீவாவின் உடலைப் பார்த்து கூடியிருந்த குடும்பத்தினர், உறவினர்கள், கிராமத்தினர் கதறி அழுததுநெஞ்சை உலுக்குவதாக இருந்தது. பின்னர் சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications