ஆற்காடு மீது அவமதிப்பு வழக்கு: மாநகராட்சியில் தீர்மானம்
சென்னை:
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தவறான தகவல் தந்து நீதிமன்றத்தை திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமிஅவமதித்துவிட்டதாகவும், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் துணை மேயர் கராத்தே தியாகராஜன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதில்,சென்னை அண்ணா நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான ரூ. 10 கோடி மதிப்புள்ள 18 கிரவுண்டு நிலத்தை முன்னாள்அமைச்சரும், திமுக பொருளாளருமான ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்புசெய்துள்ளனர்.இந்த நிலத்தை மீட்க மாநகராட்சி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந் நிலையில் ஆற்காடு வீராசாமியும், அவரது தம்பிதேவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதுதொடர்பாக நீதிமன்றம்தீர்ப்பளித்து விட்டதாகவும் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான்உள்ளது.
எனவே தவறான தகவலைக் கொடுத்து நீதிமன்றத்தை அவமதித்து விட்டதால், ஆற்காடு வீராசாமி மீது நீதிமன்ற அவமதிப்புவழக்கு தொடர மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீராசாமி குடும்பத்தாரின் ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தையும் மீட்க ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக கராத்தே தெரிவித்தர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications