சென்னையிலும் குண்டுவெடிப்பு அபாயம்: பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
பெங்களூரில் ஜனதா தளம், காங்கிரஸ் அலுவலகங்களில் குண்டு வெடிப்புகள் நடந்ததைத் தொடர்ந்து சென்னைநகரிலும் வெடிகுண்டுகள் வெடிக்கலாம் என்ற தகவல் வந்துள்ளதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரில் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சி தலைமையகங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.இதில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லாவிட்டாலும் கட்சி அலுவலகங்களில் குண்டு வெடித்துள்ளது அரசியல்வாதிகளைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஆந்திராவைத் தொடர்ந்து நக்சலைட்டுகளுக்கு கர்நாடகம் தடை விதித்தது. இதனால் நக்ஸல்கள் தான் இந்தகுண்டுவெடிப்பை நடத்தியதாகக் கருதப்படுகிறது. இதனால் கர்நாடக கதர் சட்டைகளும், ஐக்கிய ஜனதாதளத்தினரும் நக்ஸல்கள் பயத்தில் ஆழ்ந்து போயுள்ளனர்.
இந் நிலையில் சென்னை நகரிலும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழலாம் என்று தமிழக காவல்துறையைஉளவுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை நகரின் நுழைவாயில்களில் தீவிர கண்காணிப்புமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், முக்கிய பஸ் நிலையங்கள்,கோவில்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், பாலங்கள், கட்சி அலுவலகங்கள் எனஅனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக பாரதீய ஜனதாக் கட்சி, இந்து முன்னணி உள்ளிட்டவற்றின் தலைமை அலுவலகங்களிலும் போலீஸார்அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications