பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை ஸ்தம்பிப்பு!
சென்னை:
சென்னை மற்றும் வட மாவட்டங்கள் பலவற்றில் இன்று பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை முற்றிலும் முடங்கிப் போனது.செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பு பெரும் பாதிப்படைந்தது.
பி.எஸ்.என்.எல். செல்போன் சேவையை தமிழகத்தில் ஏராளமான பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையில் பல்வேறுகோளாறுகள் இருந்தபோதிலும், குறைந்த கட்டணம் என்பதால் பொது மக்களிடையே பி.எஸ்.என்.எல். செல்போன் சேவைக்குநல்ல வரவேற்பு உள்ளது.இந் நிலையில் சென்னை மற்றும் வட மாவட்டங்கள் பலவற்றில் நேற்று இரவு முதலே, செல்போன்கள் சரிவர இயங்கவில்லை.இன்று அதிகாலை முதல் செல்போன் சேவை முற்றிலும் முடங்கி விட்டது.
போன் செய்யவும் முடியவில்லை, எந்த அழைப்பையும் பெற முடியவில்லை என்பதால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்திஅடைந்தனர்.
செல்போன் இணைப்பு கோபுரங்களில் ஏற்பட்ட நெட்வோர்க் பிரச்சனை காரணமாகவும், ஸ்விட்சிங் யூனிட்டில் ஏற்பட்டகோளாறு காரணமாகவே இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் பி.எஸ்.என்.எல்.அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் ப்ரீபெய்ட் சேவை மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், பி.எஸ்.என்.எல். செல்போன்சேவை இன்று பிற்பகல் வரை முற்றிலுமாகவே முடங்கிப் போய்விட்டது. மாலைக்குள் நிலைமை சரியாகிவிடும் எனஅதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications