சென்னை மாநகராட்சி: திமுக கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் 2 பேர் போலீஸாரால் குண்டுக்கட்டாகவெளியேற்றப்பட்டனர். இதைக் கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
மாநகராட்சி மாமன்றக் கூட்டம் 3 மாத இடைவெளிக்குப் பிறகு இன்று காலை கூடியது. அப்போது திமுகஎதிர்க்கட்சித் தலைவர் சி.வி.மலையன் எழுந்து ஒரு ஒழுங்குப் பிரச்சினையை கிளப்பினார்.மாநகராட்சி துணை மேயர் மற்றும் ஆணையரின் குறுக்கீடுகள் காரணமாக பல்வேறு வளர்ச்சிப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார். ஆனால் மலையன் தொடர்ந்து பேச துணை மேயர்கராத்தே தியாகராஜன் அனுமதி மறுத்தார்.
இதற்கு திமுக கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள்கோஷமிட்டனர். இதையடுத்து அவையில் அமளி ஏற்பட்டது.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த மா.சுப்ரமணியம், கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் வெளியேற்றுமாறுஅவைக் காவலர்களுக்கு துணை மேயர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே கொண்டு விட்டனர். இதைக்கண்டித்து திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர். பின்னர் அவைக் கூட்டம் தொடர்ந்துநடந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications