ஒரே நாளில் 43 பேரைக் கடித்த வெறி நாய்!
அரக்கோணம்:
அரக்கோணத்தில் ஒரே நாளில் வெறிநாய் கடித்து 43 பேர் காயமடைந்தனர்.
அரக்கோணம் பஸ் நிலையப் பகுதியில் ஒரு நாய் வெறி பிடித்த நிலையில் சுற்றி வருகிறது.நேற்று காலை முதல் இந்த நாய் அப்பகுதியில் வருவோர், போவோரை எல்லாம் விரட்டி, விரட்டிக் கடித்துக்காயப்படுத்தியது. மாலை வரை மொத்தம் 43 பேர் இந்த நாயிடம் கடிபட்டனர்.
இதனால் அரக்கோணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடிபட்ட அனைவரும் அரசு மருத்துவமனைக்குசென்றபோது அங்கு நாய்க் கடிக்கான தடுப்பூசி இல்லை என்று ஊழியர்கள் அலட்சியத்துடன் கூறினர். இதனால்பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
பின்னர் பலர் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று காசு கொடுத்து ஊசி போட்டுக் கொண்டனர்.
ஆனால் தனியார் மருத்துவமனையில் காசு கொடுத்து ஊசி போட்டுக் கொள்ளும் அளவுக்கு வசதியில்லாத பலர்விதியை நொந்தபடி வீடு போய்ச் சேர்ந்தனர்.
43 பேரைக் கடித்துக் குதறிய வெறி நாய் இன்னும் பிடிபடவில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நகராட்சியில் எந்த ஊழியரும் இல்லை.
இன்று திங்கள்கிழமை டூட்டி ஆரம்பித்த பின்னரே நாயைப் பிடிக்கும் வேலையில் நகராட்சி ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.
அடடா, இந்த முன்சிபாலிட்டியில் என்ன ஒரு பங்சுவாலிட்டி..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications