அரசு அலுவலர்கள் மாநாட்டில் ஜெ. பங்கேற்கிறார்!!!!
சென்னை :
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடனான மோதலுக்குப் பிறகு மதல் முறையாக அரசு ஊழியர்கள் மாநாட்டில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார்.
வேலை நிறுத்தம் செய்த லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒரே நாளில் கூண்டோடு டிஸ்மிஸ்செய்து இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் ஜெயலலிதா. இந்த நடவடிக்கைக்குப் பிறகு அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் ஜெயலலிதா மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது.ஆனால் சமீப காலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகளை சரமாரியாகஅறிவித்து வருகிறார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசு ஊழியர்களின்அதிருப்தியைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறார்.
இந் நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நடந்துவரும் சங்கம்) சார்பில் சென்னையில் வரும் அக்டோபர் மாதம் மாநில மாநாடு நடத்தவுள்ளது.
இந்த மாநாட்டில் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்திதலைமையில் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது.
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சூரியமூர்த்தி கூறுகையில், அக்டோபர் 22ம் தேதி சென்னை தீவுத்திடலில் ஒன்றியத்தின் 56வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இதில் கலந்து கொள்கிறார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தங்களதுகுடும்பத்துடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும்நன்றி தீபம் கொண்டு வரப்பட்டு முதல்வரிடம் வழங்கப்படும்.
மாநாட்டில் அனைத்து அரசு ஊழியர்களும் கலந்து கொள்ள வசதியாக அக்டோபர் 21 மற்றும் 22 ஆகியதேதிகளில் ஊழியர்களுக்கு தற்செயல் விடுப்பு வழங்குமாறும் முதல்வரிடம் கோருகிறோம் என்றார் சூரியமூர்த்தி.
இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்காக மேலும் சில சலுகைகளை ஜெயலலிதா அறிவிப்பார்என்று கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications