வேளாங்கண்ணி புனித அன்னை திருவிழா: இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், புனித மேரி மாதா திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கடலோர நகரான வேளாங்கண்ணியில் ஆண்டுதோறும் மேரி மாதாவின் பிறந்த தினம் பெரு விழாவாகக்கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 11 நாள் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத் தேர் பவனி செப்டம்பர் 8ம் தேதி நடைபெறுகிறது.
மேரி மாதா திருவிழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
கடந்த டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி அலைத் தாக்குதலில் வேளாங்கண்ணியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்குபெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. ஆனால், ஏராளமான பேர், வேளாங்கண்ணி ஆலயத்திற்குள் புகுந்து தான் உயிர் தப்பினர்.
இந்த சோகம் நடந்த பிறகு வேளாங்கண்ணியில் நடைபெறவுள்ள முதலாவது பெருவிழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications