அன்புமணி ராமதாஸ் விழாவில் பங்கேற்கும் ஜெ!
சென்னை:
பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள சென்னை தாம்பரம்,தேசிய சித்த ஆராய்ச்சி மையத் தொடக்க விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.
தமிழகத்தில் பிரதமர் பங்கேற்கும் விழாக்களில் திமுக கூட்டணி அமைச்சர்கள் கலந்து கொள்வதால் அந்தவிழாக்களை முதல்வர் ஜெயலலிதா புறக்கணித்து வருகிறார்.சமீபத்தில் மதுரையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழாவையே ஜெயலலிதாபுறக்கணித்தார்.
சென்னையில் நடைபெறும் மத்திய அரசு நிகழ்ச்சிகளிலும் கூட ஜெயலலிதா கலந்து கொள்வதில்லை.
இந் நிலையில் சென்னை தாம்பரத்தில்,தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 3ம் தேதி இதன் தொடக்க விழா நடைபெறுகிறது. பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டுமையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், கப்பல் துறை அமைச்சரும், தென் சென்னைதொகுதி எம்.பியுமான டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய சுகாதாரத் துறை சார்பில் அழைப்புஅனுப்பப்பட்டிருந்தது. இதை ஜெயலலிதா ஏற்று விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
திமுக அமைச்சர்கள் சார்ந்த துறைகளின் விழாக்களைப் புறக்கணித்து வரும் ஜெயலலிதா, பாமக அமைச்சரானஅன்புமணி ராமதாசின் துறையான மத்திய நலத்துறை நடத்தும் விழாவில் பங்கேற்பது மிகுந்த முக்கியத்துவம்பெறுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து பாமக எப்படியாவது தன் பக்கம் இழுக்க பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறதுஅதிமுக.
இந் நிலையில் அன்புமணி தலைமையிலான விழாவில் ஜெயலலிதா பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
திமுக மற்றும் பாமக அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் ஜெயலலிதா பங்கேற்பது கடந்த நான்குவருடங்களில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications