மெரீனாவில் கடல் நீர் உள் வாங்கியது; பீதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நேற்று திடீரென கடல் நீர் உள்வாங்கி பெரும் பீதியைக் கிளப்பியது.

சென்னை, கடலூர் கடல் பகுதிகளில் கடந்த வாரம் முழுவதும் அலைகள் மிக வேகமாக வீசின. கரையைத் தாண்டி ரோட்டுக்குகடல் நீர் புகுந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் பல கடலோரப் பகுதி குடியிருப்புகள் காலி செய்யப்பட்டன.

இந் நிலையில் மெரீனாவில் கடல் நீர் தீடீரென 20 அடி தூரத்துக்கு உள் வாங்கியது. இதனால் கடலின் பாறைகளும், மணல்திட்டுக்களும் வெளியில் தெரிந்தன.

இதையடுத்து நீர் மீண்டும் வேகமாக கரையைத் தாண்டி வந்தது. சுமார் 17 அடி தூரத்துக்கு கரையைத் தாண்டி நீர் வந்தது.

கடலில் ஏற்பட்ட இந்த மாறுதல்களால் கரையில் இருந்தவர்கள் பெரும் பீதிக்கு உள்ளாயினர். கடலின் இந்த திடீர் மாற்றங்களால்அச்சத்தில் ஆழ்ந்த சென்னை மீனவர்களில் பெரும்பான்மையானவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

இதற்கிடையே அந்தமானில் நேற்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+