கிருபானந்த வாரியார் சிலை பீடம் இடிப்பு!
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம் :
விழுப்புரத்தில் கிருபானந்த வாரியாரின் சிலையை நிறுவுவதற்காக கட்டப்பட்ட பீடத்தை நகராட்சி ஊழியர்கள்இடித்துத் தள்ளினர்.கிருபானந்த வாரியார் இலக்கிய மன்றத்தின் சார்பில், வாரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி பழைய பஸ்நிலையம் அருகே சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பீடம் அமைக்கும் பணி நடந்து வந்தது.
ஆனால் மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் சிலை வைப்பதற்கான அனுமதியைத் தரவில்லை. இந் நிலையில்சிலையை பீடத்தின் மீது வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று இலக்கிய மன்றம் அறிவித்தது.
இதையடுத்து பீடத்தை இடித்துத் தள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் பீடத்தை நகராட்சி ஊழியர்கள் இடித்துத தரைமட்டமாக்கினர்.












Click it and Unblock the Notifications