நிரம்பியது மேட்டூர் அணை: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

மேட்டூர் அணை ஒரு வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு முழுக் கொள்ளவை எட்டியது.

கடந்த 2000மாவது ஆண்டில்தான் கடைசியாக மேட்டூர் அணை நிரம்பியது. அதன் பிறகு பருவ மழைபொய்த்ததாலும், கர்நாடகம் போதிய தண்ணீரை விடாமல் பிடிவாதம் பிடித்ததாலும் மேட்டூர் அணை போதியநீரை பார்க்கவில்லை. இதனால் அணை நிரம்பவே இல்லை.

ஆனால் இந்த ஆண்டு நிலைமை மாறியது. கர்நாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பல வாரம் கனமழை பெய்ததால், தனது அணைகளில் தேக்கி வைக்க முடியாத நீரை வெளியேற்றியது கர்நாடகம்.

இதனால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அணைநிரம்பும் அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் திடீரென நீர் வரத்து குறைந்ததால் அணை நிரம்புவதுதாமதமானது. இந் நிலையில் கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டப் பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது.

இதனால் மீண்டும் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் நீர் வரத் தொடங்கியுள்ளது.

இன்று அதிகாலை காலை மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியைத் தொட்டது. பகலில் 120.3அடியாக நீர் மட்டம் உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து வெகு வேகமாக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இப்போது அணைக்கு வினாடிக்கு 38,524 கன அடி நீர் தற்போது வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து24,303 கன அடி நீர் வெளியேறி வருகிறது.

இதனால் காவிரிக் கரையோரப் பகுதிகளிலும் 11 மாவட்டங்களில் காவிரிக் கரையோரத்தில் வசிக்கும்மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் 17,000 கன அடி நீர் மேட்டூர்-பவானிக்கு இடையே உள்ள நீர் மின் நிலையத்துக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. அதிக நீர் வரத்து காரணமாக அங்கு மின் தயாரிப்பு இரட்டிப்பாகி 300 மெகாவாட்டைத்தொட்டுள்ளது.

ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பியுள்ளதையடுத்து ஏராளமான பொதுமக்கள்அணையைப் பார்க்க குவிந்து வருகின்றனர்.

அணை கட்டப்பட்ட 71 ஆண்டுகளில் மேட்டூர் நிரம்புவது இது 37வது முறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+