பாண்டிச்சேரியில் குண்டு வெடித்து ஒருவர் பலி

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியில் புதரில் கிடந்த வெடிகுண்டு வெடித்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுவை, கரடிக்குப்பம் சாலையில் பாதி கட்டப்பட்ட ஒரு கட்டடம் நீண்ட நாட்களாக கட்டுமானப் பணி நடக்காமல் அப்படியேஉள்ளது. இந் நிலையில் கட்டட உரிமையாளர்கள் மீண்டும் கட்டுமானப் பணியை தொடங்க திட்டமிட்டார்.

இதையடுத்து செடி, கொடிகள் வளர்ந்து புதராக இருந்த கட்டடப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் அய்யப்பன்,சுப்பிரமணியன், வைத்தியநாதன் ஆகிய 3 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது கட்டடத்தின் ஒரு பகுதியில் வெள்ளை நிறத்தில் பந்து போல ஒரு பொருளை தொழிலாளர்கள் கண்டனர். அதுஎன்னவென்று அவர்கள் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அது வெடித்துச் சிதறியது.

இதில் சுப்பிரமணியன் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில்அவர்களது கை, கால், முகம் சேதமடைந்தது. இருவரும் புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் கண்டெடுத்தது சக்தி வாய்ந்த வெடிகுண்டு எனத் தெரிய வந்துள்ளது. இந்த வெடிகுண்டு இங்கே எப்படிவந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+