பெரியாறு அணை விவகாரம்: கம்பம், குமுளியில் போலீஸ் குவிப்பு
தேனி:
பெரியாறு அணையின் உயரத்தை 152 அடியாக அதிகரிக்கக் கோரி தனித்தனியாக நடைபயணம்மேற்கொண்டுள்ள பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் ஆகிய இருவரும் இன்று தங்களது பயணத்தை முடிக்கவுள்ளனர்.
இதையொட்டி தமிழக, கேரள எல்லைப் பகுதியான கம்பம், குமுளியில் பலதத் போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கக் கோரி மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார் தனது ஆதரவாளர்களுடன் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது பயணத்தை இன்றுசின்னமனூரில் முடிக்கிறார்.
அதேபோல பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் தனது நடைபயணத்தை இன்று கும்பத்தில் நிறைவு செய்கிறார்.இதைத் தொடர்ந்து பாஜக தொண்டர்களுடன் குமுளியில் ஆர்ப்பாட்டத்திலும் ராதாகிருஷ்ணன் ஈடுபடுகிறார்.மேலும் பொதுக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பாஜக தொண்டர்கள் குமுளியை நோக்கிவந்தவண்ணம் உள்ளனர்.
கேரளத்துக்கு எதிராக எல்லைப் பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதால், தமிழக-கேரள பகுதியினரிடையேமோதல் ஏதும் நடந்துவிடாமல் தடுக்கும் பொருட்டு அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குமுளியிலும், கம்பத்திலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். திண்டுக்கல் சரக டிஐஜி ரவிதேனியில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications