திமுக சார்பு டிரைவர், கண்டக்டர்கள் பெரும் ரகளை: பாதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்
சென்னை:
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியானவுடன், அதிமுக சார்புதொழிற்சங்க ஊழியர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
ஆனால், ஊதிய உயர்வு போதவில்லை என்று கூறி திமுக சார்பு தொழிற்சங்க ஊழியர்கள் ஆங்காங்கேவன்முறைப் போராட்டத்தில் இறங்கினர்.பல இடங்களில் பஸ்களை பாதியிலேயே நிறுத்திய திமுக சார்பு டிரைவர்களும் கண்டக்டர்களும் பயணிகளைபாதியிலேயே இறங்கிச் செல்லுமாறு கூறினர். இதனால் பல இடங்களில் பயணிகளுக்கும் டிரைவர்,கண்டக்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த சென்னை பல்லவன் இல்ல தலைமை அலுவலக வளாகத்தில்அதிமுக சங்கத்தின் ஊழியர்கள் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு குவிந்த திமுக, கம்யூனிஸ்ட் கட்சி சார்பான தொழிற்சங்க ஊழியர்கள்நூற்றுக்கணக்கில்லஅங்கு திரண்டு அரசுக்கு எதிராகவும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இதைத் தொடர்ந்து அதிமுக, திமுக போக்குவரத்து ஊழியர்களிடையே கடும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
திமுக சார்பு தொழிலாளர்கள் சாலையிலும் வந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். பல பேருந்துகளின் கண்ணாடிகள்உடைக்கப்பட்டன. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்பட்டது. 13 ஊழியர்களை போலீஸார்அங்கிருந்து அகற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவல் அறிந்ததும் திமுக தொழிற்சங்க ஊழியர்கள் ஆங்காங்கே பெரும் வன்முறையில் இறங்கினர். இதில்10க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
நாடகம்: வாசன் கருத்து
இதற்கிடையே போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு ஒரு கண் துடைப்பு நாடகம் என்று தமிழக காங்கிரஸ்தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கடந்த நான்கு வருடமாக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தாமல்தற்போது திடீரென ஊதிய உயர்வு என்று ஒன்றை அறிவித்திருப்பது கண் துடைப்பாகவும், நாடகமாகவும் தெரிகிறது.
அதிமுக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கையே இது மீண்டும் பிரதிபலித்திருக்கின்றது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதமே உள்ள நிலையில் பல்வேறு சலுகைகளை இந்த அரசு அறிவித்து வருகிறது. இதை நம்பி மக்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications