ப.சியை பதவி நீக்கம் செய்ய ஜெ கோரிக்கை
சென்னை - டெல்லி:
வருமான வரித்துறை தொடர்பான வழக்கில் தனது மனைவி ஆஜரானதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ப.சிதம்பரம் உடனடியாகபதவி விலக வேண்டும். அல்லது அவரை பிரதமர் மன்மோகன் சிங் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
பிரதமர் மன்மேகன் சிங் தலைமையில் டெல்லியில் நடக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றஜெயலலிதா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,வருமான வரித்துறை தொடர்பான முக்கியமான வழக்கில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆஜராகிஅந்த வழக்கில் வருமான வரித்துறை தோல்வியுற்றுள்ளது.
நிதித்துறை அமைச்சரின் பொறுப்பில் உள்ள ஒரு துறையின் வழக்கில் அவரது மனைவி ஆஜரானது தார்மீகரீதியில் சரியல்ல.அவர் ஆஜரானது தனக்கு தெரியாது என்று நிதியமைச்சர் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. அது பொறுப்பற்றபதில்.
எனவே சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால், அவரை பிரதமர்மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வை இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும்கொண்டாடிய ஊழியர்கள் மீது திமுகவினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும், பேருந்துகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வன்முறையில் ஈடுபட்டவர்கள்மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
டெல்லி சென்ற ஜெயலலிதா அங்கு என்டிடிவிக்கு அளித்த பேட்டியில்,
சிதம்பரம் தானாகவே பதவி விலக வேண்டும். சிதம்பரம் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றார்.
இது தொடர்பாக பிரதமரை சந்தித்து வலியுறுத்துவீர்களா என்று கேள்விக்கு, பிரதமருடன் எனக்கு தனிப்பட்ட சந்திப்பு ஏதும்இருக்கும் என்று நினைக்கவில்லை என்றார்.
பாஜகவும் வலியுறுத்தல்:
இதற்கிடையே இன்று காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா,
தனது கணவர் பொறுப்பு வகிக்கும் ஒரு துறை தொடர்பான வழக்கில் நளினி சிதம்பரம் ஆஜரானது முறையல்ல. இருவருமேஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்கள்.
ப.சிதம்பரத்திற்கு சொந்தமான பஞ்சாலையும் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதால், இந்த வழக்கில் ஆஜராகிய நளினிசிதம்பரத்தின் மனதில் குடும்ப நலன் தான் மேலோங்கியிருக்கும் என்பதை மறுக்க முடியாது. அவர் வருமான வரித்துறைக்காகநியாயமாக வாதிட்டிருக்க முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை.
தனது மனைவி ஆஜரானது தனக்கே தெரியாது என்று ப.சிதம்பரம கூறியிருப்பது வெட்கக்கேடான செயல்.
நளினி வாதாடியதற்குப் பொறுப்பேற்று சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications