பிரேமானந்தா வழக்கு தீர்ப்பு: ஜனாதிபதியின் கருத்தைப் பெற ஜேத்மலானி வலியுறுத்தல்
டெல்லி:
செக்ஸ் சாமியார் பிரேமானந்தா விவகாரத்தில், குற்றவாளிகளை அடித்து, உதைத்து உண்மையை வரவழைக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து குறித்து, ஜனாதிபதியின் கருத்தைப் பெற மத்திய அரசு முயல வேண்டும் என பிரபலகிரிமினல் வழக்கறிஞரான ராம் ஜேத்மலானி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று இந்த விவகாரத்தை ஜேத்மலானி கிளப்பினார்.அவர் பேசுகையில், பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்தெரிவித்துள்ள சில கருத்துக்கள் மிகவும் கடுமையானவை.
குற்றவாளியை அடித்து உண்மையை வரவழைக்க முடியும் என்று போலீசார் கருதினால், போலீசார் அதைச் செய்யலாம் என்றும்,இவ்வாறு அடித்துப் பெறப்படும் சாட்சியம் செல்லும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதன்மூலம் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடித்து, உதைக்கவும் மூன்றாந்தர தண்டனைகளை வழங்கி சாட்சியம் பெறவும்,காவல் நிலையங்களை கொடுமைக் களங்களாக மாற்றவும் போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் லைசென்ஸ் கொடுத்துள்ளது.
இந்தத் தீர்ப்புக்காக நாம் தலைகுனிய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்தால் சர்வதேச அளவில் இந்தியாவின் சட்ட,திட்டம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால் உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து குறித்து ஜனாதிபதியின் கருத்தைப் பெற வேண்டும். என்றார்.
13 பெண்களை கற்பழித்தது, ஒருவரைக் கொலை செய்தது ஆகிய குற்றங்களுக்கா பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது நினைவுகூறத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த பிரேமானந்தாவுக்காக விசாரணைநீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடியவர் ஜேத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications