போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்: பஸ் போக்குவரத்து பாதிப்பு!
சென்னை:
தமிழகம் முழுவதும் 7 சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர்வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ஊதிய உயர்வை அறிவித்துள்ளார்.இந்த ஊதிய உயர்வுக்கு சில தொழிற்சங்கங்களே வரவேற்பு தெரிவித்துள்ளன.கம்யூனிஸ்டுகள், திமுக, பாமக, மதிமுக, காங்கிரஸ் சார்புடைய முக்கிய தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.
தொழிலாளர்களை அரசு ஏமாற்றி விட்டது, தன்னிச்சையாக ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார் என்று இவை கண்டனம் தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் அந்தச் சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் குதித்துள்ளனர்.
7 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான டிரைவர்களும், கண்டக்டர்களும் நேற்று நள்ளிரவு முதல்பஸ்களை இயக்கவில்லை. இதனால் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை இந்தப்போராட்டம் நடக்கும் என இந்தச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இருப்பினும் அதிமுக சார்பு தொழிற்சங்க ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போய் விடவில்லை.
விரும்பத்தாகத நிகழ்வுகளைத் தவிர்க்கும் வகையில், பேருந்து நிலையங்கள், போக்குவரத்து டிப்போக்கள் ஆகியஇடங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது.
காலை 10.30 மணியளவில், தி.நகர் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் போக்குவரத்துஅமைச்சர் விஸ்வநாதன் முன்னிலையில் அதிகாரிகள், சில தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டுஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருமாறு அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அரசு அழைப்புஅனுப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications