ஊதிய ஒப்பந்தம்: 13 போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கையெழுத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 13 போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் 9 சதவீத ஊதிய உயர்வை முதல்வர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார். இதற்கு அதிமுக மற்றும் சில தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.ஆனால், திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் சார்பு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியஉயர்வு ஏமாற்றம் அளிப்பதாகக் கூறி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டனர்.
இந் நிலையில், சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஸ்வநாதன்முன்னிலையில் புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 9 அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள் மற்றும் 13 தொழிற்சங்கத்தலைவர்கள் கையெழுத்திட்டனர்.
இதன் முலம் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில்இருக்கும்.












Click it and Unblock the Notifications