மதக் கலவரத்தை தூண்டுவோரை தண்டிக்க விரைவில் கடுமையான சட்டம்
டெல்லி:
மதக் கலவரத்தைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
இதற்கான மசோதா ஒரு வாரத்தில் உருவாக்கப்பட்டு மக்கள் மத்தியில் விவாதத்துக்கு வைக்கப்படும் என உள்துறை அமைச்சர்சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக மூன்று வரைவுமசோதாக்கள் தயார் செய்யப்பட்டுள்ள. இறுதி மசோதா தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இது விரைவில் இன்டர்நெட்டில் போடப்படும். இந்த மசோதா குறித்த ஆலோசனைகள், கருத்துக்களை மக்கள் தெரிவிக்கலாம்.அதன் பின்னர் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.
முன்னதாக தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங்,
நாட்டில் தீவிரவாதத்தையும் மதக் கலவரத்தைத் தூண்டுவோரையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவோம். தீவரவாதம் மதக்கலவரம் மூலம் யாரும் அப்பாவி மக்களைக் கொல்வதை சகித்துக் கொள்ள முடியாது.
மதக் கலவரத்தை யார் தூண்டினாலும் கடும் தண்டனைகள் கிடைக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
13 ஆண்டுகளுக்குப் பின் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் இப்போது தான் நடந்துள்ளது.
இதில் பிரதமர் தவிர, மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்களான விபி சிங், ஐகே குஜ்ரால், வாஜ்பாய் மற்றும் ஜெயலலிதாஉள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்கள், அத்வானி ஆகியோரும் பங்கேற்றனர்.
சமீபத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலை மன்மோகன் சிங் மாற்றியமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications