என்னையும் திருமாவையும் பிரிக்க முடியாது: ராமதாஸ்
விழுப்புரம்:
இனி என்னையும் திருமாவளவனையும் பிரிக்க எந்த சூழ்ச்சி செய்தாலும் முடியாது என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.அதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:
எனக்கும் திருமாவளவனுக்கும் இடையே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்தபோது எங்களை ஒன்று சேர்க்க தமிழ்நாட்டில் ஒருவர்கூட முன்வரவில்லை. எங்களை ஒன்று சேர்த்தது தாய் மொழியான தமிழ் தான். இனி என்னையும் திருமாவளவனையும் பிரிக்கஎந்த சூழ்ச்சி செய்தாலும் முடியாது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே இது வேறு மொழிக்கு எதிரானது அல்ல என்று கூறி வருகிறோம். வரும் 21ம்தேதி இந்த இயக்கத்தின் சார்பில் தமிழுக்காக சில கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தவுள்ளோம்.அதில் லட்சக்கணக்கானர்கள் கலந்து கொள்வார்கள்.
நாங்கள் தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கை இது தான். போராட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை அன்று இரவேவிடுதலை செய்யாதீர்கள். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சிறையில் இருக்க நாங்கள் தயார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications