ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு பெண் கொலை: 3 வாலிபர்கள் வெறிச் செயல்
சென்னை:
சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் ரயிலில் இருந்து வெளியில் தூக்கிவீசப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச் செயலைச் செய்த மதுரையைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு சென்னையில் இருந்து கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் வழக்கம்போல் கூட்ட நெரிசல் மிக அதிகமாக இருந்தது.தாம்பரத்தில் ரயில் நின்றபோது அந்தப் பெட்டியில் 3 வாலிபர்கள் ஏறினர். முழு போதையில் இருந்த அவர்கள் பெண்பயணிகளிடம் வம்பு செய்தனர். கேவலமான சைகைகள் செய்வதும், பெண்களைப் பற்று தாறுமாறாகப் பேசுவதுமாகஇருந்தனர்.
இரவு 11 மணியளவில் ரயில் அச்சரப்பாக்கத்தைத் தாண்டிச் சென்றபோது 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணிடம் இந்த 3வாலிபர்களும் கலாட்டா செய்தனர். அவரைத் தொடுவதும், சீண்டுவதுமாக இந்த நாய்களும் பெரும் அட்டகாசம் செய்தன.
இதை பிற பயணிகள் கண்டித்தபோது அவர்களை இந்த மூன்று வாலிபர்களும் தாக்கினர். இந் நிலையில் அந்தப் பெண்ணைமூன்று வாலிபர்களும் சேர்ந்து ரயிலில் இருந்து வாசல் வழியாகத் தூக்கி வீசினர்.
அதிர்ச்சி அடைந்த பயணிகள் கூக்குரல் இட்டபடி அவரச சங்கிலியை இழுத்தனர். அப்போது ரயில் திண்டிவனத்தைஅடைந்துவிட்டது. அங்கு ரயில் நின்றது.
ரயில் நிற்க ஆரம்பித்தவுடன் மூன்று பேரில் ஒருவன் அதிலிருந்து வெளியில் குதித்தான். மற்ற இருவரையும் பயணிகளேமடக்கிப் பிடித்தனர். ரயிலில் வேறு ஒரு பெட்டியில் இருந்த போலீசார் ஓடி வந்து இந்த இருவரையும் பிடித்தனர்.
பின்னர் தூக்கி வீசப்பட்ட பெண்ணின் நிலை என்னவானது என்பதை அறிய போலீசார் தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.அப்போது சுமார் 1 கி.மீ. தூரத்தில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடந்தார்.
தப்பிக் குதித்த வாலிபரும் காயங்களுடன் கிடந்தார்.
இந்த வெறிச் செயலில் ஈடுபட்ட மூன்று எருமை மாடுகளும் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.
அவர்களது விவரம்: மதுரை என்ஜிஓ காலனியைச் சேர்ந்த செந்தில் (29), விஸ்வநாதன் நகரைச் சேர்ந்த முத்தையா பூபாலன்(28), இந்திராணி நகரைச் சேர்ந்த ஆனந்தன் (29) ஆகியோர் தான் அந்த மூவர்.
இதில் ஆனந்தன் தான் ரயிலில் இருந்து தப்பிக் குதித்து காயமடைந்துள்ளான். அவன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளான்.
மற்ற இருவரும் செங்கல்பட்டு ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு இறந்து போன பெண் தனியாகத் தான் பயணம் செய்துள்ளார். அவரது பெயர், விவரம்உடனடியாகத் தெரியவில்லை. அவரை அடையாளம் காண தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications