ஐரோப்பிய நாடுகள் மீது விரைவில் புதிய தாக்குதல்: அல்-கொய்தா மிரட்டல்
துபாய்:
லண்டனில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளைப் போல அமெரிக்காவை ஆதரித்து வரும் ஐரோப்பிய நாடுகள் மீதும்விரைவில் புதிய தாக்குதல்கள் நடத்துவோம் என அல்-கொய்தா எச்சரித்துள்ளது.
பின் லேடனின் வலது கரமான அய்மான் அல்-ஜவாகிரி நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் புதிய வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார். அல்-ஜசீரா டிவிக்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த வீடியோ நேற்று ஒளிபரப்பானது.அதில்,
பாலஸ்தீனம், இராக், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள நாடுகள் தான் எங்களது இலக்கு. லண்டனில் பஸ்,ரயில்களில் குண்டு வெடிப்புகளை நாங்கள் தான் நடத்தினோம். அது நாங்கள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் முகத்தில்கொடுத்த அறை.
(அப்போது லண்டனில் தற்கொலைத் தாக்குதலில் பலியான முகம்மத் சித்திக் கான் என்ற அல்-கொய்தா தீவிரவாதி பேசும்காட்சியும் இடையில் சேர்க்கப்பட்டுள்ளது. தனது தாக்குதலுக்கான காரணம் குறித்து சித்திக் விளக்குகிறார்).
அமெரிக்காவோடு சேர்ந்து கொண்டு எங்கள் நாடுகளில் ரத்த ஆறை ஓடச் செய்த ஐரோப்பிய நாடுகளில் நாங்கள்எரிமலைகளாக வெடிப்போம். எங்களது எச்சரிக்கைகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
அமெரிக்காவுடனான கூட்டுப் போரில் இருந்து விலகினால் ஐரோப்பாவைத் தாக்க மாட்டோம் என அறிவித்தோம். அதையும்மதிக்கவில்லை.
இதனால் நீங்கள் எங்களுக்குத் தந்த சாவுகளை உங்களுக்குத் திருப்பித் தருவது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.
இவ்வாறு ஜவாகிரி கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications