ஜெயேந்திரர் அர்ச்சகரோ சாஸ்திரியோ அல்ல: தமிழக அரசு
சென்னை:
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்ய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்குஉரிமையோ, சிறப்புச் சலுகையோ ஏதும் கிடையாது என்று தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை திட்டவட்டமாகஅளித்துள்ளது.
இந்தக் கோவிலில் சங்கரச்சாரியாருக்கு பெரும் சலுகைகள் தரப்பட்டு வந்தன. ஜெயேந்திரர் வந்தால் அவரே கருவறையில் சென்றுபூஜை செய்வது மரபாக இருந்து வந்தது.இந் நிலையில் கடந்த ஜூலை மாதம் ராமேஸ்வரம் சென்றிருந்த ஜெயேந்திரர், ராமநாத சுவாமி ஆலய கருவறைக்குள் சென்றுபூஜை நடத்த முயற்சித்தார். இருமுறை முயற்சித்தும் அவரை கருவறைக்குள் நுழைய கோவில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள்மறுத்து விட்டனர்.
இதனால் அதிருப்தியுற்ற ஜெயேந்திரர் ராமேஸ்வரத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் கருவறைக்குள் சென்று பூஜை செய்யதனக்கு உரிமை உண்டு என்று கூறி இந்து அறநிலையத்துறைக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார் ஜெயேந்திரர்.
இதற்கு இத்தனை மாதங்கள் கழித்து இப்போது தான் இந்து அறநிலையத்துறை ஆற, அமர பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்தக் கடிதத்தில், கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யவும், தீபாராதனை காட்டவும் தனக்கு உரிமை உண்டு என்றுஜெயேந்திரர் கூறுவது தவறு.
பூஜை செய்யவும், தீபாராதனை காட்டவும் கோவில் அர்ச்சகர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஜெயேந்திரருக்கு அந்தஉரிமையும் கிடையாது, சிறப்புச் சலுகையும் கிடையாது. மரபுப்படியோ, வழக்கப்படியோ அவருக்கு அந்த சிறப்புச் சலுகைவழங்கப்படவில்லை.
காஞ்சி சங்கராச்சாரியார் அர்ச்சகரோ அல்லது சாஸ்திரியோ இல்லை. எனவே கருவறைக்குள் அவரை அனுமதிக்க முடியாது என்றுகூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications