நாளை பிரதமர் சென்னை வருகை: அன்புமணி விழாவில் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் ரூ. 47 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தேசிய சித்த ஆராய்ச்சி மையத்தைமுதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திமுக, பாமக மத்திய அமைச்சர்களோடு தமிழகத்தில் ஒரு விழாவில் ஜெயலலிதா மேடை ஏறுவதுஇதுவே முதல் முறையாகும்.

14.7 ஏக்கர் பரப்பளவில் இந்த தேசிய சித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை சார்பில்நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

மாலை 4.50 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுசிறப்புரையாற்றுகிறார். மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.

மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, பனபாக லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங்ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.

விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை பிற்பகல் 4.30 மணிக்கு சென்னைக்கு வருகிறார் மன்மோகன் சிங். விமான நிலையத்தில்அவரை ஆளுநர், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதன் பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்கிறார்பிரதமர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் அரங்கிற்கு பிரதமர் செல்கிறார்.அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய நூலை அவர் வெளியிடுகிறார். நூல் வெளியீட்டுக்குப் பின்னர் விமானநிலையம் திரும்பி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+