சினிமா, டிவியில் தம் அடிக்கும் காட்சிகளுக்குத் தடை: காந்தி ஜெயந்தி முதல் அமல்
சென்னை:
திரைப்படங்களிலும் டிவி தொடர்களிலும்ல் புகை பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காந்தி ஜெயந்தி தினமானஅக்டோபர் 2ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நலத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அன்புமணி,சினிமா, டிவியில் புகைப் பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளோம். இந்தத் தடை காந்தி ஜெயந்திமுதல் அமலுக்கு வருகிறது. இந்த விஷயத்தில் சினிமாத்துறையினரின் எதிர்ப்பை எல்லாம் ஏற்க முடியாது. இந்தத் தடைசட்டப்பூர்வமானது. சட்டத்தை சினிமாக்காரர்கள் உள்பட எல்லா குடிமக்களும் மதித்துத் தான் ஆக வேண்டும்.
சிகரெட் பாக்கெட்டுகளில் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் உடல் நலக் கேடு குறித்து படத்துடன் விளக்கம் தர வைப்பது குறித்துயோசித்து வருகிறோம். இது குறித்த அரசாணை விரைவில் வெளியாகும்.
அதன்படி, சிகரெட் பாக்கெட்டின் 50 சதவீத பகுதியில் சிகரெட்டால் ஏற்படும் உடல் நலக் கேடு குறித்த படமும் விளக்கமும்எச்சரிக்கையும் இடம் பெற வேண்டும். இது போன்ற எச்சரிக்கைகள் கனடா உள்பட பல நாடுகளில் அமலில் உள்ளன.
புகையிழையால் ஏற்படும் நோய்கள் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகின்றன. பெரும் சதவீத மக்கள் இந்த நோய்களால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதனன் மொத்தத்தில் எல்லா புகையிழைப் பொருட்களுக்கும் ஒட்டுமொத்தத் தடை விதிப்பது குறித்துஇன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் இந்தியா தீவிரமாக யோசிக்க வேண்டியிருக்கும் என்றார் அன்புமணி.
மேலும் சினிமாவுக்காக மிக ஆபாசமான விளம்பரங்கள் வைக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற ஆபாசவிளம்பரங்களைத் தடை செய்யுமாறு ஒலி-ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஜெயல்பால் ரெட்டியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்என்றார் அன்புமணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications