ஏற்காடு மலையில் லாரி கவிழ்ந்து 12 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஏற்காடு:


சேலத்திலிருந்து ஏற்காடு சென்ற லாரி, மலைப் பாதையில் கவிழ்ந்து உருண்டதில் அதில் பயணம் செய்த 12 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஏற்காடு, சின்னக்கொல்லப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் என்பவர், ஏற்காடு சாலை முனியப்பன் கோவிலுக்குகுடும்பத்தினர், உறவினர்கள் என 70 பேருடன் லாரியில் சென்றார்.

கோவிலில் சாமி கும்பிட்ட பின்னர் அனைவரும் சின்னக்கொல்லப்பட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாலை 5.30 மணியளவில் லாரி வந்து கொண்டிருந்தபோது, 12வது ஹேர்பின் வளைவில் லாரி நிலை தடுமாறி ஓடிமலையிலிருந்து கவிழ்ந்து உருண்டது. லாரியில் இருந்த அத்தனை பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலர் லாரிக்கடியில் சிக்கிநசுங்கினர். அலறியபடி மலை பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பலரும் பலத்த காயமடைந்தனர்.

இதில் ரவி, பிரியங்கா, மாலதி, கவுதம், விஸ்வா, குழந்தை கவுண்டர், தமிழரசி, விஜயலட்சுமி, மோகன சுந்தரம், வடிவேல், சாந்தி,பாப்பா ஆகிய 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

லாரி கவிழ்ந்து விழுந்ததை ஏற்காடு படகு இல்லத்தைச் சேர்ந்த ஒரு ஊழியர் பார்த்து விட்டு உடனடியாக தீயணைப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியை ஆரம்பித்தனர். ஆனால், அதற்குள் மலைப் பகுதியில் இருட்டத் தொடங்கிவிட்டதால் மீட்புப் பணிகள் மிக மிக மெதுவாகவே நடந்தன.

இறந்த 12 பேரின் உடல்களும் மீட்க்பபட்டன. காயமடைந்த 56 பேரை மீட்டு சேலம் அரசு மருத்துவனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.

மலையில் இன்னும் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பது குறித்து போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக ஏற்காடு மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு 8 மணியளவில்தான் போக்குவரத்தசீரடைந்தது.

லாரி டிரைவர் குடிபோதையில் வண்டியை படுவேகத்தில் ஓட்டியதால்தான் இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில்கூறப்படுகிறது.

ஜெ. இரங்கல்:

விபத்தில் 12 பேர் இறந்ததற்கு முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சின்னக் கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் ஏற்காடு மலைப் பாதையில் நடந்த விபத்தில் இறந்த செய்தி கேட்டு ஆழ்ந்தஅதிர்ச்சியுற்றேன்.


அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.விரைவில் அவர்கள் பூரண குணமடைய வேண்டும்என்று பிரார்த்திக்கிறேன்.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50,000 நிதியும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000மும், லேசானகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 6000மும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

சரக்கு லாரியில் 70க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு, மலைப் பாதையில் குடிபோதையில் லாரியை ஓட்டியடிரைவரை என்னவென்று சொல்வது?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+