சூறாவளி பாதிப்பு: அமெரிக்காவுக்கு இந்தியா நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
அமெரிக்காவில் காத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியைஅளித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பத்திரிகைத் தொடர்பாளர் சஞ்சய் பாரு திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம்கூறுகையில், அமெரிக்காவில் காத்ரீனா சூறாவளித் தாக்குதலால், நியூ ஓர்லியான்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துபிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவ இந்தியாவின் சார்பில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அமெரிக்கசெஞ்சிலுவைச் சங்கத்திற்கு பிரதமர் அறிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications