இன்று பிரதமர் சென்னை வருகை: அன்புமணி விழாவில் ஜெ.
சென்னை:
சென்னை தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் ரூ. 47 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள தேசிய சித்த ஆராய்ச்சி மையத்தைமுதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சனிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் திமுக, பாமக மத்திய அமைச்சர்களோடு தமிழகத்தில் ஒரு விழாவில் ஜெயலலிதா மேடை ஏறுவதுஇதுவே முதல் முறையாகும்.14.7 ஏக்கர் பரப்பளவில் இந்த தேசிய சித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை சார்பில்நிறுவப்பட்டுள்ள இந்த மையத்தின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.
மாலை 4.50 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுசிறப்புரையாற்றுகிறார். மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.
மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, பனபாக லட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங்ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கிறார்.
விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை பிற்பகல் 4.30 மணிக்கு சென்னைக்கு வருகிறார் மன்மோகன் சிங். விமான நிலையத்தில்அவரை ஆளுநர், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதன் பின்னர் அங்கிருந்து தாம்பரம் செல்கிறார்பிரதமர்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் மேயர் ராமநாதன் அரங்கிற்கு பிரதமர் செல்கிறார்.அங்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய நூலை அவர் வெளியிடுகிறார். நூல் வெளியீட்டுக்குப் பின்னர் விமானநிலையம் திரும்பி அங்கிருந்து டெல்லி செல்கிறார்.
பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications